இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க தவெக காரர் ஒருத்தரு… ’பாத்தீங்களா மதுரைல அண்ணனோட பவர… 2026ல அண்ணன் தான் ஜெயிக்க போறாரு’னு கெத்தா பேசிட்டு இருந்தாரு.
அத கேட்டுட்டு இருந்த வயசான தாத்தா ஒருத்தரு… ‘ஷூட்டிங் தான் போறேன். எல்லோரும் வீட்டுக்கு போங்க… என்ன இப்போ பாலோ பண்ணாதீங்க’னு சொன்னாரா..
அவரு சொல்றத பாத்தா.. தலைவர் மாறி உங்கள் தளபதியும் யூடர்ன் அடிப்பாரோ தோனுச்சு’னு சொன்னாரு…
அதக்கேட்டா தவெக காரரு… ‘பெருசு எப்படி நைசா கோர்த்துவிடுது பாத்தியா’னு முறைச்சிக்கிட்ட போறாரு. update kumaru memes and trolls may 1
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 1

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பிறகு படித்துக் கொள்ளலாம் என One drive ல் சேமித்து வைக்கப்பட்ட PDF டாக்குமென்டுகள் எதுவும் பிறகு படிக்கப்பட்டதாக வரலாறு பூகோளம் என எதுவும் இல்லை..

▶படிக்காதவன்™✍
உண்மையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்ன காலம் வசந்த காலம்
இன்னைக்கு நினைச்சி பார்த்தால் அது வாடகை காலம்…

Sabarish_twittz
உட்கார்ந்துகிட்டு வாட்ஸ்அப்ல உழைப்பாளர் தின வாழ்த்துகள்’னு ரயில் விட்டா மட்டும் போதாது எழுந்து நாமளும் ஏதாவதொரு வேலைக்கு போகனும்னு யாராவது சொல்லுங்களேன் அவன்கிட்ட…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மனுசனுக்கு ஏற்கனவே இருக்கற மன உளைச்சல் போதாதுன்னு
இந்த சிஎஸ்கே வேற ஒவ்வொரு தடவையும் புதுப்புது டிசைன்ல தோத்து வெறுப்பேத்துறானுக..

iQKUBAL
நகை கடை வியாபாரிகள் ~ நாங்களா தேடிப்போய் யாரையும் ஏமாத்தல சார்..
ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுத்தோம்.. அவ்வளோ தான். 😑
AkshayaTritiya

திருப்பூர் சாரதி
NCERT பாடத்திட்டத்தில் அக்பர் பாபர் அவுரங்கசீப் பற்றிய பாடங்கள் நீக்கம்!
அண்ணே… சத்ரபதி சிவாஜி யாரோட சண்டை போட்டார்னு எக்ஸாம்ல கேப்பாங்க, அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க!

Sasikumar J
வாழ்க்கையில ஒண்ணு’மே’ இல்லன்னு நினைக்காதீங்க…!
இன்னைக்கு தான் அந்த ‘மே’ ஒண்ணு…!!

K Vadivel Kuppusamy
கடன் கொடுத்தவன் ஒரே ஒரு கேள்விய வச்சுக்கிட்டு ரொம்பத் தயங்கித் தயங்கி குற்ற உணர்ச்சியோட உயிர் வாழ்றான்
1. எப்போ தருவீங்க..?
கடன் வாங்குனவன் நிறைய பதில்கள வச்சிக்கிட்டு ஜாலியா குடும்பத்தோட ஊர் சுத்துறான்..!
1. உன் பணத்த தூக்கிட்டு ஓடிட மாட்டேன்
2. உன் காச புடுங்கியா தின்னுட்டேன்
3. ஏன் பணம் பணம்னு அலையிற
4. என்கிட்ட வாங்கி அப்படி என்ன பண்ணப் போற
5. இப்போ என்ன அவசரம்
6. இன்னுமா ஞாபகம் வச்சிருக்க
7. ஏற்கெனவே கொடுத்த மாதிரி இருக்கே
8. உனக்கு என்ன செலவு இருக்கப் போகுது
9. ஒருதடவ கொடுத்துட்டு ஓராயிரம் தடவையா கேப்ப
10. உன்ன ஏமாத்தணும்னு நினைக்கல
11.கண்டிப்பா கைக்கு வந்தவுடன் குடுத்துடுறேன்
12.இப்போ விட்ரு அடுத்த மாசம் குடுத்துடுறேன்
நீங்களாவது நல்லாருங்கடா டேய் ..!

balebalu
டிவி ஆன் பண்ணாலே வரிசையா
நீட் கோச்சிங் விளம்பரங்கள் தான்
கையில காசு
கழுத்துல ஸ்டெதாஸ்கோப் 🚶
NEET
லாக் ஆஃப்