இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க டீக்குடிச்சி இருந்த நண்பர் “மாப்ள இந்த மே மாசம் ஊட்டிக்கு போகனும்னு பிளான் பண்ணோம். போக முடியல. நாளைக்கு ஜூலை பொறக்குது. சம்பளம் வந்துரும்… வார்றியா… கூமாப்பட்டி போவோமா?”னு கேட்டாப்ல.
எதுக்கு அங்க போகனும்னு கேட்டேன். அதுக்கு ”என்ன மாப்ள அப்படி சொல்லிட்ட… அங்கதான் சர்பத் மாதிரி தண்ணி இருக்கான் வா போவோம்”னு சொன்னாரு.
வந்துச்சி கோவம்… கூமாப்பட்டில குடிக்கிறதுக்கு தண்ணியவே வெளியூருக்கு போய் விலைகொடுத்து வாங்கிட்டு வர்றோம்னு அந்த ஊர்க்காரர் சொன்ன வீடியோவ காமிச்சேன்.
அத பாத்துட்டு, அடுத்த கொஞ்ச நேரத்துக்கு நண்பர் சத்தமே காணோம். update kumaru memes and trolls june 30
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 30

வடிவேல்
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை வாபஸ் வாங்கிட்டாங்க.
இது அந்த ஜீ கவர்மென்ட்க்கு தெரியுமா?
வாபஸ் வாங்கினதே மகாராஷ்டிராவுல இருக்குற ஜீ கவர்மென்ட்தான்!

கடைநிலை ஊழியன்
ஒரு நல்ல விடுமுறை என்பது யாதெனின்,
சுவையான உணவும், சோம்பேறித்தனமும் நிறைந்ததே !!

Sasikumar J
ஒரு துள்ளலான திங்கள் கிழமையை கொடுக்க
ஞாயிற்றுக்கிழமை வைத்த மீன் குழம்புயால் மட்டும்தான் முடியும்…!

Mannar & company™🕗
Profile Bio ல Actorனு போட்ருக்கீங்களே.. எந்த படத்துல நடிச்சிருக்கீங்க..?
ஆக்டர்னா திரையிலதான் நடிக்கணுமா.. ஆபிஸ்ல மேனேஜர்கிட்ட நடிக்கிறேன்.. வீட்ல பொண்டாட்டிகிட்ட நடிக்கிறேன்.. ஊர்ல சொந்தக்காரன்கிட்ட நடிக்கிறேன் வேறென்ன வேணும்!!

ArulrajArun
சம்பாதிக்கிற காசுல வீட்டு செலவு போக மீதி காசை சேர்த்து வச்ச காலம் போய் இப்போ சம்பாதிக்கிற காசுல மாசம் மாசம் EMI கட்டுனது போக மீதி காசை தான் வீட்டு செலவு பார்க்க வேண்டி இருக்கு இதுல எங்க நாம காசை சேமிச்சு வைக்கிறது

திருப்பூர் சாரதி
மில்க் பிஸ்கெட்டில் தொடங்கி
கிரீம் பிஸ்கெட்டுடன் பயணித்து
மாரி பிஸ்கட்டில் முடிவடைகிறது வாழ்க்கை!

செங்காந்தள்
ஸ்மார்ட்போன்
உள்ளவர்கள் தூங்கும் போது கடைசியாக பார்ப்பதும், எழும்போது முதலாக பார்ப்பதும் போனைத் தான்…!!!

சரண்யா
அண்ணே ஒரு பாட்டில்
தண்ணி குடுங்க,
அக்குவாபீனாவா இல்ல பிஸ்லரியா…
கூமாபட்டி தண்ணி குடுங்கணே.. 😏

கனகா
பசியறிந்து சோறு போட
ஒருவர் இருக்கும் வரை..
சாப்பிட்டாயா எனக் கேட்க
ஒருவர் இருக்கும் வரை..
தாமதமாகும் இரவுகளில்
எங்கிருக்கிறாய் என விசாரிக்க
ஒருவர் இருக்கும் வரை..
நோய் வந்தால் இரவுகளில்
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள
ஒருவர் இருக்கும் வரை..
குரல் மாறுபாட்டில் மன
நிலையைக் கணிக்க
ஒருவர் இருக்கும் வரை..
போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என
வழியனுப்ப
ஒருவர் இருக்கும் வரை..
வீட்டைக் காத்திருந்து கதவு திறக்க
ஒருவர் இருக்கும் வரை..
தோற்றுப் போய் திரும்புகையில்
தோள் சாய்த்துக் கொள்ள
ஒருவர் இருக்கும் வரை..
போ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும்
உடனிருக்க
ஒருவர் இருக்கும் வரை..
மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து
கொள்ள ஒருவர் இருக்கும் வரை..
நம் கனவுகளை தம் கனவுகளாகத்
தோள்களில் தூக்கி சுமக்க
ஒருவர் இருக்கும் வரை..
எதற்காகவும் எவரிடமும்
நம்மை விட்டுக் கொடுக்காத
ஒருவர் இருக்கும் வரை..
கூட்டத்தின் நடுவே தனித்துப்
போகையில் கரங்கள் பற்றி
நானிருக்கிறேனென உணர்த்த
ஒருவர் இருக்கும் வரை..
தவறுகளைத் தவறென
சுட்டிக் காட்டித் திருத்தும்
ஒருவர் இருக்கும் வரை..
துயர் அழுத்தும் கணங்களில்
அருகிருந்து கண்ணீர்த் துடைக்க
ஒருவர் இருக்கும் வரை..
மனக் குறைகளைப் புலம்பித்
தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க
ஒருவர் இருக்கும் வரை
மட்டுமே..
வாழ்வு வசந்தமானது!
லாக் ஆஃப்