வீட்டுல அத எதிர்பார்க்காதீங்க! – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls june 29

இன்னைக்கு காலைல, “ஸ்கூல் பசங்க தண்ணி குடிக்க வாட்டர் பெல் முறை வேணும்னு போன வாரம் தான் நான் ட்வீட் போட்டேன், இந்த வாரம் மினிஸ்டர் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு… ஐயாவுக்கு ட்விட்டர்ல எவ்வளவு பவர் தெரியுமா?”னு வீட்டாம்மாகிட்ட பெருமையா சொன்னேன்.

அதுக்கு அவுக, “இதெல்லாம் காக்கா உக்கார பணம்பழம் விழுந்த கதை தான்… வெட்டியா கதை பேசாம, போய் சீக்கிரமா சிக்கன் வாங்கிட்டு வாங்க’னு அசிங்கப்படுத்திட்டா.

அதான்… ’உலகமே பாராட்டினாலும் வீட்டுல மரியாதை கிடைக்காது’னு கண்ணம்மாப்பேட்டை கந்தன் சொன்னது சரியா தான் இருக்குனு… சட்டுனு பையத் தூக்கிட்டு கிளம்பிட்டேன்… சிக்கன் வாங்க! update kumaru memes and trolls june 29

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 29

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

சலூன்ல முடி வெட்டிக்கும் போது,

me to me for no reason:

கண்ணை மூடி உட்காரு இல்லே டேபிள், சேர், ஹேர்டிரையர்னு எதையாவது வெறிச்சு பார்த்துட்டு முகத்துல எந்த உணர்ச்சியும் காட்டாம உட்காந்துக்க. கண்ணாடியை மட்டும் பாத்துறாத..

கோவிந்தராஜ்

She :~ Let’s Breakup da..😏
இந்த ஜென்மத்துல, என்னை மாதிரி ஒருத்தி உனக்கு கிடைக்கவே மாட்டா..

Me :~ அப்பாடா.. ரொம்ப சந்தோசம் 😂😂

▶படிக்காதவன்™✍

நாளைக்கு காலையில் என்ன குழம்பு வைக்கலாம் என்கிற வார நாட்களில் வரும் குழப்பம்

சனிக்கிழமை இரவு பெரும்பாலான பெண்களுக்கு வருவதில்லை…

கோவிந்தா

சின்ன வயசுல இருந்து வாழ்க்கையில முன்னுக்கு வந்தபிறகு தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு கொள்கையோட இருந்தேன்

அப்புறம் ??

~ அப்புறம் என்ன! முடி கொட்டுறதுக்கு முன்னாடியே மேரேஜ் முடிச்சுருவோம்னு
கொள்கையையே மாத்திகிட்டேன்.

🤔எனக்கொரு டவுட்டு!?

டாடின்னு சொல்லி ஓடி வந்து கட்டி அணைக்கையில் “அணைந்து” விடுகிறது கவலை.

#மகளன்பு

Royal Enfield Buddha

சம்பாதிப்பவர்களால் செலவு செய்ய முடியாது,
செலவு செய்பவர்களால் சம்பாதிக்க முடியாது.

செங்காந்தள்

நல்லவைகள் மஞ்சள் பை மாதிரி அருகிப் போய் விட்டது.

கெட்டவைகள் பாலிதீன் பைகள் மாதிரி பெருகிப் போய் விட்டது…!!!

Amutha

~ கடவுளே என்ன மட்டும் லவ் பண்ணணும், என்கூட மட்டும் பேசிட்டே இருக்கணும் அப்டி ஒரு பையனை கட்டிகணும் –

God ~ காணிக்கையா போட்ட பத்து ரூவாய எடுத்துட்டு கௌம்பு😏😏

Mannar & company™🕗

ஆண்கள் ஏன் கல்யாணநாள் கொண்டாடுவது இல்லை தெரியுமா..

ஏன்னா அவங்க கஷ்டத்தை மறைத்து வாழ்றவங்க!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share