ADVERTISEMENT

வாடகை வீட்டுக்கு இவ்ளோ கண்டிஷனா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த நண்பரு, ‘வீட்ட வாடகைக்கு விடனும் மாப்ள… என்ன பண்ணலாம்’னு கேட்டாரு. விட வேண்டியது தானேனு சொன்னேன்.

இல்ல சில கண்டிஷன் இருக்குனு சொன்னாரு… என்ன கண்டிஷனு கேட்டேன்.

ADVERTISEMENT

அவரு, வீட்டை வாடக்கைக்கும் விடனும். காசு வரணும். ஆனா வீடும் டேமேஜ் ஆக கூடாது. வீட்டு செலவ நம்ம கிட்ட கொண்டு வரக் கூடாது… இது எல்லாம் நடக்கணும்னு சொன்னாரு.

அவரு சொன்னத கேட்டுட்டு, “நீ சொன்ன எல்லாமே நடக்கனும்னா வீட்டை வித்துரு’னு சொன்னேன். கடுப்பாகி கிளம்பிட்டான்… update kumaru memes and trolls june 28

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. update kumaru memes and trolls june 28

செங்காந்தள்

“பெண்கள் மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்” – சௌமியா அன்புமணி அட்வைஸ்

சகுனம் சொல்லும் பல்லி தவிட்டு தாளிக்குள் விழுந்த கதையாக இருக்கு.

ADVERTISEMENT

Mannar & company™🕗

இட்லிக்கு நம்மளை கேட்கமலேயே வடை வைக்குற ஹோட்டல் மாதிரிதான்,
கடவுள் நமக்கு கொடுக்கிற பிரச்சினைகளும்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

சாப்பாடு மஞ்சள் கலர்ல இருக்கறதை பார்த்துட்டு லெமன் ரைஸ்ன்னு எல்லாரும் தப்பா நினைச்சுட்டு இருக்காங்க..

ஆனா மஞ்சள் தூள் போட்டு ரீல்ஸ் பண்ண தண்ணில சாதம் வடிச்சதால அந்த கலர்ல வந்துருக்குன்னு உங்கள்ல நிறைய பேருக்கு தெரியறதில்லை..

jaaparkhan

மனிதர்களும் பங்கு வர்த்தகமும் இரண்டே ரகம் தான்.

காலையில் உங்களிடம் நல்லவனாக நடித்துவிட்டு மாலையில் பலனை எதிர்பார்க்கும் Day trading ரகம்.

நீங்கள் ஏமாறும் வரை நீண்ட காலம் நல்லவனாக நடிக்கும் Mutual Fund ரகம்.

Sasikumar J

பாத்திரத்தில் பால் வாங்கின வரை கொழுப்பு சத்து ஆக இருந்தது,

பாக்கெட் ல வாங்க ஆரம்பிச்சதும் கொழுப்பு கெட்டதா மாறி போச்சு…!

மித்ரன் 🍁

பெண்கள் மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்‌ – சௌமியா அன்புமணி

அரிசியை மட்டும் திண்ணு கோணிப்பைய கடிச்சிராதேனு பெருச்சாளி எலிக்கு அட்வைஸ் பண்ணுச்சாம் .. அந்த கதையா இருக்கு. 😂

கோவிந்தராஜ்

அமைச்சரே இவன் பாடிய துதியை கவனித்தீரா

இல்லை மன்னா

இன்று போல் என்றும் வாழ்கன்னு சொல்றான்

புரியவில்லை மன்னா

காலம் பூரம் சிங்கிலா வாழ சொல்றான்யா என்ன😠

ச ப் பா ணி

சில பேர் social media மேல
பைத்தியமா இருக்காங்க…

பல பேர் பைத்தியமாவே
Social media ல் இருக்காங்க…

▶படிக்காதவன்™✍

சமயத்தில் வாழ்க்கையும் விஜய்சேதுபதி படம் மாதிரி தான்
இன்பமோ துன்பமோ வந்தா வரிசையா வரும் இல்லைன்னா எப்பவாவது வரும்…

✒️Writer SJB✒️

ஒருத்திக்கு புருஷனா ஆகணும்னு நினைச்சு லவ் பண்ணது அந்த காலம்,,

ஒருத்திக்கு புருஷன் இருக்கிறான் என்று தெரிஞ்சும் லவ் பண்றது இந்த காலம்..!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share