இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இந்த ஈரான் – இஸ்ரேல் போரை டிரம்ப் கெஞ்சி கூத்தாடி நிறுத்துனதா டிவில செய்தி ஓடிட்டு இருந்துச்சி.
அதுமட்டும் இல்லாம ’நான் தான் எல்லா நாட்டுக்கு இடையிலேயும் சமாதனம் பேசுனேன். அதனால எனக்கு தான் நோபல் அமைதி பரிசு தரனும்’னு டிரம்ப் சொல்லிட்டு இருக்காருனு செய்தில சொன்னாங்க.
அத பாத்துட்டு இருந்த ஒருத்தரு, “அப்படினு பாத்தா எனக்கு எப்போவோ பத்து நோபல் பரிசு தந்திருக்கனும்.
எங்க வீட்டுல என் அம்மாவுக்கும், என் பொண்டாட்டிக்கும் நடக்குற சண்ட இருக்கே… உலக யுத்தமே தோத்துரும். ஆனா இரண்டு பேர் கிட்டயும் அடிவாங்கி நான் தான் எத்தனையோ தடவ தீத்து வச்சிருக்கேன். சோ மிஸ்டர் டிரம்ப் லைன்ல வந்து நில்லுயா”னு சொல்றாரு. update kumaru memes and trolls june 24
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. update kumaru memes and trolls june 24

ஜேபி பாண்டியன்
முருகனுக்கு மட்டும் பிரம்மாண்டமாக மாநாடு நடத்தியதால் வெங்கடாஜலபதி, ஐயப்ப கடவுள்கள் கோபமடைந்து வரும் தேர்தலில் பிஜேபியை தோற்கடிக்க தங்கள் பக்தர்களுக்கு உத்தரவு போடுவதற்கு முன் அவர்களுக்கும் மாநாடு நடத்தி விடுவது பிஜேபிக்கு நல்லது😜

Joe…😎😎
சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கிய ஒன்றிய பாஜக அரசு – RTIல் அம்பலம்.
தமிழுக்கான நிதி அதிகமா ஒதுக்க மாட்டாங்க,
தமிழ்நாட்டுக்கான “வெள்ள நிவாரணநிதி” ஒதுக்க மாட்டாங்க,
தமிழ் மாணவர்களுக்கு “கல்வி நிதி” ஒதுக்க மாட்டாங்க,
தமிழர்கள் கீழடி நாகரீகத்துக்கு அங்கீகாரம் தர மாட்டாங்க,
ஆனா இவனுங்களுக்கு தமிழ்நாட்டுக்காரன் ஓட்டு மட்டும் வேணுமாம்..

கோவிந்தராஜ்
இப்பல்லாம் சாப்பிடறதுல்ல மனுசங்க ரெண்டே வகைதான்…
ஒண்ணு பசிச்சா சாப்பிடறவங்க..
மத்தது “மருந்து சாப்பிடணும்கிறதுக்காக” கரக்ட் டைமுக்கு சாப்பிடறவங்க!!!

பார்வதி
எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் – டிரம்ப்
அப்படியே வடகலை தென்கலை பிரச்சினைக்கும் ஒரு தீர்ப்பு சொல்லிட்டா, அமைதிக்கான நோபல் பரிசை குடுத்துரலாம் சாரே….

மெக்கானிக் மாணிக்கம்
ஸ்கூலுக்கு போகும்போது திருநீர் வைக்கணும், ருத்ராட்ச கொட்டை போடணும் ~ அண்ணாமலை
நீட் எக்ஸாம் எழுத போகும் போது தாலி மெட்டிய கழட்ட சொன்னானுவளே அப்ப அமெரிக்காவுக்கு போயிருந்தாரோ

பார்த்திபன்
போதைப்பொருள் வழக்கில அதிமுக நிர்வாகி பிரசாத்க்கும் தொடர்பு இருக்காம்..
~ யாரு, பேருக்கு பின்னாடி Say no to drugs போடுவானுங்களே.. அவனா?!
ஆமாங்க.. அவங்களே தான்..

சரண்யா
எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ வைக்கக் கூடாது – தவெக தலைமை..
பாருங்க… இதையே நடுரோட்டுல பேனரா வைக்க போறாய்ங்க…. 😂😂😂

பர்வீன் யூனுஸ்
அந்த காலத்து தமிழ் படங்களில் கடைசி காட்சியில் போலீஸ் வரும்
# இப்போதைய படங்களில் கடைசி காட்சியில் ‘பார்ட்-2’ அறிவிப்பு வருகிறது.

க்ரஷ் என்றால் யார்?
ஒரு வாரம் குளிக்காமல் உடம்பில் ஈ மொய்த்தாலும் நீ ஒரு சுகர் பேபி அதனால்தான் உன் மேல் ஈக்கள் மொய்க்கின்றன என்றும் சொல்பவனுக்கு பெயர்தான் க்ரஷ்..!
லாக் ஆஃப்