இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தர் எல்லோருக்கும் அவர் காசுல டீ வாங்கி கொடுத்துட்டு இருந்தாரு.
ஏண்ணே… என்ன விஷேசம்னு கேட்டேன். அதுக்கு அவரு, “என்ன தம்பி உங்களுக்கு தெரியாதா, ஸ்விஸ் பேங்க்ல இந்தியர்களின் பணம் மூன்று மடங்காகிடுச்சாம்… அத மோடி எடுத்து ஒவ்வொருத்தருக்கும் 45 லட்சம் ரூபாய நம்ம வங்கி கணக்குல அனுப்பி விட போறாரு. அதான் எல்லோருக்கும் இப்போ டீ வாங்கி கொடுத்து ட்ரீட் வச்சிட்டு இருக்கேன்”னு சொன்னாரு.
அப்போதான் நெனச்சேன்… ‘மோடி இவங்களுக்கு 28% சதவீதம் ஜிஎஸ்டி போட்டுருக்கக் கூடாது… 108% ஜிஎஸ்டி போட்டுருக்கனும்’னு… டீ குடிக்குற ஆசைய போச்சி… அங்கிருந்து கிளம்பிட்டேன். update kumaru memes and trolls june 23
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 23

HáKi
இந்துக்கள் ஒற்றுமையா இருந்து வாக்கு வங்கியை நிரூபிச்சாங்களா ???
~ நிரூபிச்சுட்டாங்க ஜீ.. ஆனா ஓட்டு நமக்கு போடல.

Jaya Kanagaraja
நிதி ஆயோக் கூட்டத்துக்கு போனதுக்கு திமுக வுக்கு எதிராக பக்கம் பக்கமா அறிக்கை விட்ட விஜய்,
முருகர் மாநாட்டுல் அதிமுக அமைச்சர்கள் கலந்துகிட்டத பத்தி பேசுவாரா?
காத்திருப்போம்…

Sathiya Sothanai
வந்தே பாரத் ரயிலில் பாஜக எம்.எல்.ஏ-வுக்கு இடம் தர மறுத்த நபர் மீது தாக்குதல்! – செய்தி
தேர்தலில் ஜெயிக்க வச்சதுக்கு ஒருவேள சிறப்பு பரிசா கொடுத்துருப்பாரோ?

கடைநிலை ஊழியன்
என்ன டா.. பிரேக்-அப் பெரிய வலி..
திங்கள்கிழமை ஆபீஸ்க்கு போற வலி என்ன னு தெரியுமா..

லட்சுமி
அவள் ~ ஒருத்தன மனசுல நினைச்சிகிட்டு இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டுற பொண்ணு நான் கிடையாது.
இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிவடைகிறது.

ராம்குமார்
காலைல இட்லி பொடி அரைக்க சொன்னேனே அரைச்சியா..?
ஆமாங்க, மொட்டை மாடியில் இட்லி காய வச்சிருக்கேன்.
நல்லா காஞ்சதும் மிக்ஸியில் போட்டு அரைச்சு வைக்கிறேன்… ●

கர்ணன்
ஆடு, மாடு, கோழியெல்லாம்
பார்க்கும் போது அழகா இருக்கு…
வெட்டும்போது பாவமா இருக்கு…
சாப்பிடும் போது ருசியா இருக்கு..

▶படிக்காதவன்™✍
கழுத வயசாகியும் திங்கட்கிழமை வேலைக்கு போறதுக்கு நீயே சலிச்சிக்கிட்டா
LKG UKG போற சின்ன குழந்தைகளை என்ன சொல்றது…

லாவண்யா
படுத்துக்கிட்டே டிவி பாக்கும் போது வர்ற தூக்கம்…
எந்திச்சு போய் டிவிய ஆப் பண்ணிட்டு வந்து தூங்கும்போது கழுத எங்க போவுதுனே தெரியல…
லாக் ஆஃப்
