சந்திரமுகியா மாறிடுச்சா… அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls june 17

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க அதிமுக – பாஜக கூட்டணி பத்தி பேசிட்டு இருந்தாங்க…

அப்போ ஒருத்தரு, “ஜெயலலிதா தன்னோட கடைசி பத்து வருஷத்துல, பாஜகவ அதிமுக பக்கத்துல நிக்கவே விடல…

அதுக்கப்புறம் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சினு சொன்னப்போ…. எடப்பாடி கூட்டணிய விட்டு வெளியேறினாரு. ஆனால் இப்போ பாஜக தான் எல்லாங்குற மாறி அண்ணாமலை பேசிட்டு இருக்காரு… அதிமுக தரப்புல எந்த ரியாக்சனும் இல்லயே?”னு வருத்தப்பட்டாரு.

அதுக்கு இன்னொருத்தரு… “அட நீ வேற… எனக்கு இப்பலாம் அதிமுகவ பார்த்தா ‘சந்திரமுகியா மாறுன கங்காவ பாரு’னு ரஜினி சொல்வாரே… அதான் ஞாபகம் வருது”னு சொல்றாரு… update kumaru memes and trolls june 17

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 17

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

சரி டீக்கடையார் சொன்னதுல என்ன அவதூறு இருக்குன்னு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப துடிக்கற..?

‘பாஜக-அதிமுக கூட்டணி ஒருவேளை 2026-ல் வெற்றி பெற்றுவட்டால்…’ ன்னு சொல்லிருக்காரே, இது அவதூறு இல்லாம வேற என்னவாம்..?

Mannar & company™🕗

டீக்கடைக்காரர்கள் அரசியல் பண்ணலாம் ஆனால்,
டீக்கடையார் அரசியல் பேசக்கூடாதா?!

Anvar_official

கோவில்ல ரொம்ப நேரம் நின்னு வேண்டிக்கிட்டு இருக்கானா..
ஏன் கல்யாணம் ஆகணும்னா?!

இல்ல கல்யாணம் ஆனதுனாலதான்!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

சரி டீக்கடையார் சொன்னதுல என்ன அவதூறு இருக்குன்னு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப துடிக்கற..?

‘பாஜக-அதிமுக கூட்டணி ஒருவேளை 2026-ல் வெற்றி பெற்றுவட்டால்…’ ன்னு சொல்லிருக்காரே, இது அவதூறு இல்லாம வேற என்னவாம்..?

சரண்யா

நீ ஒரு வேலை சொன்னா,
முடியும் னு சொன்னவனை நம்பு,.

முடியாது னு சொன்னவனை கூட நம்பு,..

ஆனா, இப்ப தோ உடனே அந்த வேலையை செய்றன் னு சொல்றான் பாரு அவன மட்டும் நம்பாத…. 🙄😏🏃‍♀️🏃‍♀️

சரண்யா

மாத சம்பளம் முழுவதும் EMI லயே போய் விடுகிறதா, அதை சரி செய்ய எளிய வழி னு you tube ல ஒரு வீடியோ இருந்துச்சி,..
சரி னு உள்ள போய் பார்த்தா இப்ப வாங்குற சம்பளத்தோட அதிக சம்பளத்துக்கு வேற வேலைக்கு போங்க னு சொல்றான்… 🙄😏🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

நெல்லை அண்ணாச்சி

விரைவில் உலகின் ” மூன்றாவது ” மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா ~ பிரதமா் மோடி…

இந்த முதலாவது… இரண்டாவதுலாம் வேண்டாமா…!!?

Sasikumar J

அரசியலும், கல்யாண வாழ்க்கையும் இரண்டும் ஒண்ணு வெளியில் இருந்து பார்க்கிற வரைக்கும் ரொம்ப நல்லா இருக்கும் உள்ள வந்து பார்த்த பிறகு தான் அதோட கஷ்டம், நஷ்டம் எல்லாமே தெரியும்..!

✒️Writer SJB✒️

ஏங்கண்ணு
உனக்கு கடன் வாங்கினாலே பிடிக்காதே பர்சனல் லோன் வேணுமானு கேட்ட புள்ள கிட்ட இம்புட்டு நேரம் அப்படி என்னதா பேசின?

எனக்கு யாருமே பொண்ணு தர மாட்டேங்குறாங்க இந்த புள்ளையாவது செட் ஆகுமான்னு பேசி பாத்தேன் ஆத்தா..!

( 90ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்)

✒️Writer SJB✒️

ஏன் பாட்டி ரோட்ல பிச்சை எடுக்குறீங்க ?

என் மகன் தான் என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டான்

சரி இந்த குழந்தைங்க வண்டி எதுக்கு வாங்கினீங்க?

என் மகன் இந்த பக்கம் வந்தான்னா பேரனுக்கு கொடுக்க சொல்லணும்..!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share