இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர பாத்ததும், ’என்ன நல்லாருக்கியளா”னு கேட்டேன்.
அதுக்கு அவரு “எங்க அந்த டிரம்ப் 25% வரி போட்டு வச்சிருக்காரு… இந்த மோடியும் அதப்பத்தி எதுவும் கேக்க மாட்டாரு… ஏற்கெனவே நாட்டுல இருக்குற ஜிஎஸ்டினால நாக்கு தள்ளுது… இப்போ எக்ஸ்போர்ட்டுக்கும் வெடி வச்சிட்டானுங்க’னு புலம்பி தள்ளுனாரு..
”அடேய் நீதானப்பா, ’அமெரிக்காவுல ட்ரம்பும், இந்தியாவுல மோடியும் ஆட்சிக்கு வரணும்… அப்பதான் நல்லா இருக்க முடியும்’னு சொன்ன… இப்போ அப்டியே பல்டி அடிக்குறியே”னு கேட்டேன்.
அதுக்கு அவரு, “ஆமா சொன்னேன்… ஆனா டிரம்ப் இவ்ளோ சீக்கிரமா முதுகுல குத்துவாருனு நெனைக்கலையே’னு கூவுனாரு…
”உனக்கு இப்போ தான் முதுகுல குத்துனதா தோணுதா… எனக்குலாம், கருப்பு பணத்த மீட்குறேனு சொல்லி ஒரே நாள் நைட்டுல ஒட்டுமொத்த நாட்டையும் ரோட்டுல க்யூல நிக்க வச்சாரு பாரு.. அன்னைக்கே தோனிடுச்சி” சொன்னேன். நண்பர் பதிலே பேசல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

mohanram.ko
பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்…
இத்தனை நாளா பாஜக கூட்டணியிலா இருந்தாரு ஓபிஎஸ்? சொல்லவே இல்லை…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
யார் என்ன சொன்னாலும் பதிலுக்கு தேங்க்ஸ் சொல்றது தான் நல்ல பழக்கம்னு தமிழர்களோட ஆழ்மனசுல போயி யாரோ நம்ப வைச்சுருக்காங்க..
கல்யாணம்னு பத்திரிக்கை தந்தாலும் தேங்கஸுன்றாங்க, காதுகுத்துல குழந்தை அழுதுச்சுன்னாலும் தேங்க்ஸுன்றாங்க.. யாராவது தேங்கஸ் சொன்னாலும் பதிலுக்கு தேங்கஸுன்றாங்க..

Sasikumar J
படிச்சு ‘சாதி’க்க சொன்னா…!
‘சாதி’க்(கா)கவே படிச்சுக்கிட்டு இருக்காங்க…!!

▶படிக்காதவன்™✍
மாச கடைசியில் 30 அல்லது 31 தேதியில் சம்பளம் வாங்குற உங்க உலகம் வேற
அடுத்த மாசத்துல பாதி தேதியான பிறகுதான் இந்த மாசத்தோட பாதி சம்பளமே வாங்குற எங்க உலகம் வேற…

iQKUBAL
சண்டை கூட போடு.. ஆனா பேசாம இருக்காத..
சண்டை வர்றதுக்கு காரணமே உன் கூட பேசுறது தான்டி.. 😷
ச ப் பா ணி
பா.ஜ மாநில நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு;
சரத்குமாருக்கு பதிவி இல்லை – செய்தி
கட்சியில் இணைந்தவர்களுக்கு எல்லாம் பதவி… கட்சியையே இணைத்தவருக்கு பதவி இல்லையா? அய்யஹோ…

சரண்யா
சம்பளம் வந்துட்டா திமிரா இருப்பேன்,.. 😎
எவ்ளோ நாள் இருப்ப… 😏
EMI எடுக்கற வரைக்கும்… 🏃♀️

மயக்குநன்
50 ஆண்டுகளாக திமுக, அதிமுக முதுகில்தான் காங்கிரஸ் சவாரி செய்து கொண்டிருக்கிறது!- குஷ்பு.
அப்படிப்பட்ட காங்கிரஸ் முதுகிலேயே நீங்க அஞ்சு வருஷம் சவாரி செஞ்சிட்டீங்களே மேடம்..?!

✒️Writer SJB✒️
சினிமால லவ் பண்ண கைதட்டி ரசிக்கிறாங்க நிஜத்தில் லவ் பண்ணா அருவா எடுத்து வெட்டுறாங்க,, ஏன்பா?
சினிமா வேற நிஜ வாழ்க்கையை வேற இது தெரியாம தானடா நடிகன் பின்னாடி சுத்திட்டு இருக்கீங்க…
லாக் ஆஃப்