இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்தரு. “ஏலேய் நேத்து பார்லிமெண்டுல மோடிஜி ஒரு கலக்கு கலக்கிட்டாரு”னு சொன்னாரு. அப்படி என்னத்த கலக்குனாரு?னு கேட்டேன்.
“இந்த கிண்டலாம் வேண்டாம்.. அந்த பாகிஸ்தான் பயலுவ, மோடிக்கிட்டு வந்த ‘அய்யா நீ அடிச்சதே போதும்… எங்கள ஆள விடு’னு கெஞ்சிருக்கானுவளாம். அதனால தான் பாகிஸ்தான் தப்பிச்சது. இல்லனா பாகிஸ்தானை காணாம ஆக்கிருப்பாரு’னு சொன்னாரு…

அதுக்கு நான் ”இவ்ளோ சொன்னாரே, அந்த ராகுல்காந்தி சொன்னா மாதிரி… ’டிரம்ப் ஒரு பொய்யர்’னு சொல்லிருக்கலாம்ல? ஏன் சொல்லல?”னு கேட்டேன். அவருகிட்ட சத்தமே இல்ல. பாவம் அவரு என்ன பண்ணுவாரு… மோடி ஒரு பேச்சுக்கு கூட டிரம்ப் பேரை சொல்லவில்லையே!
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ரஷ்யா உடனான இந்தியாவின் பொருளாதார உறவிற்கு அபராதமாக இந்தியாவுக்கு 25% கூடுதல் வரி விதிப்பு
ட்ரம்ப் டூ மோடி ~
நான் இங்கிலீஸ் பேசும் போதெல்லாம் புரிஞ்ச மாதிரியே சிரிச்சியே அதுக்கு ஒரு வரி,
நீ பேசற ஹிந்தியை டிரான்ஸ்லேட் பண்ணவன் பேசின இங்கிலீஸ் புரியாம நான் முழிச்சேன்ல அதுக்கு ஒரு வரி..

Black cat
என்னோட நட்பு வட்டம் ரொம்ப சின்னது
எவ்ளோ சின்னது??
நா மட்டும் தா இருப்பேன்

சித்ரா தேவி
காலையில் எழுந்ததும் வாட்சப்பில் மற்றவர்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸை பார்க்காமல் கடந்தாலே அன்றைய நாளை முக்கால்வாசி மன உளைச்சல் இல்லாமல் கடந்து விடலாம்.

Baashhu
மாரி செல்வராஜ் அஜித் சாவுக்கு வாய் திறக்கவே இல்லை, உண்மைதான். மாரிகளின் நோக்கத்த நாம முதல்ல புரிஞ்சுக்கனும். அஜித் கொல்லப்படுகிறார், ஒட்டு மொத்த தமிழ்நாடும் அஜித் பக்கம் நின்று குரல் எழுப்புகிறது, ஒரு குரல் கூட போலிஸ்னா அப்படித்தான்,அவனப் பாத்தாலே தெரியிது திருடன்னு, அவன் ஒழுங்கா பதில் சொல்லிருக்கமாட்டான் அதான் அடிச்சதுல செத்துட்டான் இப்படி எந்தக் குரலும் இல்லை.
இதே மாதிரி சாதிய ஆணவக் கொலைகள்ள ஒட்டு மொத்த தமிழ்நாடும் கவின் பக்கம் நின்றிருந்தால் இந்த மாரிகள் குரல் எழுப்பும் தேவையே இருக்காது. ஆனால் அடுத்த சாதி பொண்ணு கேக்குதா உனக்கு, அவன் சாதில காதலிச்சா வெட்டத்தான் செய்வான் என்ற குரல்கள் தான் மாரிகளை வெளியே வரச் செய்கிறது.
இளவரசன்களாலும் கவின்களாலும் தான் மாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்களது சினிமாவும் உருவாக்கப்படுகிறது. பல தலைமுறைகளாய் வாழ்நாளெல்லாம் முதுகில் குத்தப்பட்ட கத்தியோடு பேனா பிடித்து எழுதுபவர்கள் இந்த மாரிகள், அந்த வலியை உணரும்போதெல்லாம் காகிதத்தில் மை கொஞ்சம் அழுத்தமாகவே பதியும், தாக்குபவனை விட்டுவிட்டு தற்காப்பை கையிலெடுப்பனை சாதி வெறியன் என்பது அபத்தம்.

சரவணன். 𝓜
காங்கிரஸின் தவறால்தான் பாகிஸ்தான் இருக்கிறது – அமித்ஷா
அடேய்களா.. நீங்க ஆட்சில இருக்குறதுக்கு காரணமே காங்கிரஸ் பண்ண தவறால தான்யா..

✒️Writer SJB✒️
உங்க அப்பா பார்த்திருக்கிற மும்பை மாப்பிள்ளை ஒரு ஃபிராடு வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புறேன்னு சொல்லி நிறைய பேர் கிட்ட பணம் வாங்கி ஏமாத்தி இருக்கான்
இதுதான் நீ என்கிட்ட கடைசியா சொன்னது
நான் கிடைக்கலைன்னு பொறாமைல சொல்றேன்னு நெனச்சேன் ஆனா நீ சொன்னது தான் உண்மை.!

balebalu
கத்தி எடுத்தவன் கத்தியால சாவான் – பழமொழி
கத்தி வெச்சு ரீல்ஸ் போடுறவன்
ஜெயிலுக்கு போவான் – புதுமொழி

வேலூர் சரவணன்
மோடியின் உரை முடிந்த 24 மணிநேரத்தில்… அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியவை👇
🎯 நான் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவந்தேன்(29 வது முறை) !
🎯’வணிகத்தை’ ஆயுதமாக பயன்படுத்தினேன்!
🎯இந்தியா மீது 25% வரி!

Baskar Jayraman Mookkammal
”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்றியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ். “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும், அதே தண்டனையே தர்றீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் திருடன் அருண். ஜட்ஜூக்கு சுருக்கென்றது.
திருடன் அருணை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு, ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.
ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். அருணைத் தனியாக அழைத்துச் சொன்னார். “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்கில் ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற தோட்ட வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய்,கேண்டீனில் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் இருக்கிற காசு உனக்கு” அருண் சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.
ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார். “அருண் கூலியை வாங்கிக்கிட்டு “செல்”லுக்குப் போகிற வழியில் அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யனும், யார் எப்ப, எப்படிப் பண்றீங்கன்னு, அவனுக்குத் தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார். அவர்கள் இந்தத் தொழில் சவாலை ஏற்றார்கள்.
முதல் நாளே அருண் பிக்பாக்கெட்டில் காசை இழந்தான். எவ்வளவு கெஞ்சியும், அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு, கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு, அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.
அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும், வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால், ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!
எல்லோரும் விடுதலை ஆகும் நாள் அன்று, ஜட்ஜ் வந்தார். “சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.
“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை, ஒரு செக்கண்டில் தட்டிக்கிட்டு போறது, எவ்வளவு அக்கிரமம்-னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் அருண்.
“பிக் பாக்கெட் கொடுத்தவன், பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும், இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.
லாக் ஆஃப்