தீண்டாமை ஒரு பெருங்குற்றம் – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls july 29

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்கே நண்பர் ஒருவர், “மச்சி இன்னைக்கு பொண்ணு பாக்க போனேன். ஆனா அவங்க இன்ஜினியர் மாப்ள தான் வேணும், மாசம் 1 லட்சம் சம்பாதிக்கனும், சொந்த வீடு வச்சிருக்கனும்’னு கன்டிசன் அடுக்குனாங்க.. கடுப்பாகி எந்திச்சி வந்துட்டேன்” என்று சொன்னார்.

அவரிடம், ”இத நீ கடுப்புனு சொல்ற, ஆனா அதவிட கடுப்பு என்னனா, நெல்லையில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரு, மாசம் ஒரு லட்சம் சம்பாதிச்சும், சொந்த வீடு, நிலம்னு இருந்தும், சாதிய காரணமா வச்சி வெட்டி கொன்றுக்கானுங்க… அது உனக்கு தெரியுமா?” என்று கேட்டேன்.

ADVERTISEMENT

அதுக்கு அவர், “என் பிரச்சனை கொடுமைனு நெனச்சா, இது அதைவிட கொடுமையா இருக்கே… சரி மாப்ளே, நம்ம ஆட்களேயே ஒரு நல்ல பொண்ணா பாத்து சொல்லுயா?” என்றார்.

கடுப்பாகி டீய மூஞ்சில ஊத்திட்டு, திரும்பி கூட பார்க்காமல் வந்துட்டேன்…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

✒️Writer SJB✒️

பிரிக்க முடிந்தது?

ADVERTISEMENT

ஆடி மாசம் புதுமண தம்பதிகளை,,

பிரிக்க முடியாதது ?

ஆடி மாசமும் எல் ஆர் ஈஸ்வரி பாட்டும்..!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

காங்கிரஸின் தவறால்தான் பாகிஸ்தான் இருக்கிறது – பாஜக தலைமை

யாராவது அவங்களுக்கு நேரு, பாகிஸ்தான், காங்கிரஸ் இந்த மூணு தவிர வேற ஏதாவது சொல்லி கொடுங்களேன் ப்ளீஸ்!

லாவண்யா
ஒன்றிய பாஜக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் திடீர் கண்டனம் – செய்தி

ஏதே… அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்துருச்சா?

ஜாஃபர்

இன் டிசிஎஸ்,

~ சார்.. இன்டர்வியூக்கு வந்துருக்கேன்..

~ அங்க பாரு.. உன்னை இன்டர்வியூ பண்ண வேண்டிய மேனேஜர் layoff ஆகி நிக்கறான்.. அவன் கூட சேர்ந்து ரெண்டு பேரும் வேற பக்கம் போயி வேலை தேடுங்க..

மயக்குநன்

மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது!- அண்ணாமலை.

அதான்… தலைவரா இருந்தப்ப எக்கச்சக்கமா வடை சுட்டீங்களோ பாஸ்..?!

Mannar & company™🕗

“தமிழ்நாட்டுக்கு ஏராளமான ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு அளித்துள்ளது”ன்னு நீங்க சொன்னதை மக்கள் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க தலைவரே!

என்னன்னு?!

தமிழ்நாட்டுக்கு ஏராளமான ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு “அழித்துள்ளது”ன்னுதான்!!

Sasikumar J

திங்கட்கிழமை காலையில மீட்டிங் முடிஞ்சு காபி பிரேக் தாண்டிவிட்டா போதும் அந்த வாரம் போறதுக்கு உண்டான எல்லா தன்னம்பிக்கையும், தைரியமும் வந்துடும்…!

பிளாக் பூனை

ஜடேஜா 89 ரன்னில் இருக்கும்போது…

Stokes – Draw பண்ணிக்கலாம் bro…

Jaddu – நீ 150 அடிக்கும் போது மட்டும் சுகமா இருந்திச்சா… போய் பவுலிங்க போடு

Sasikumar J

டூ வீலர் ல 2nd கியர்க்கும் 1st கியர்க்கும் நடுவே இருக்குற நியூட்ரல் மாதிரி தான்

கல்யாணம் ஆன ஆண்களுக்கான நிலைமை

அம்மாவுக்கு, மனைவிக்கும் அவ்வளவு சீக்கிரமாக நியூட்ரல் ஆக முடியாம தவிகிறாங்க…!

✒️Writer SJB✒️

அத்தை உங்க பொண்ண எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்க?

மாசம் ஒரு லட்சம் சம்பாதிச்சு கார் வீடு வாங்கி சமையலும் கத்துக்கிட்டு சொல்லு உடனே பொண்ணு தரேன்..!

வாசுகி

என்ன திடீர்னு எனக்கு எதிரா ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்க பயம் போயிடுச்சா ?

அதெல்லாம் ஒன்னும் இல்லை ஜி நேத்து என்ன பாக்க அப்பாயின்மென்ட் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே அதுல கொஞ்சம் ஆப்செட் ஆயிட்டேன்..!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share