’ஏய் சோனமுத்தா…. போச்சா’- அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அப்போ அங்கிருந்த நண்பர் ஒருத்தரு… ”இப்போலாம் நான் அந்த ரெண்டு பேர் மாதிரி தாம்பா இருக்கேன்”னு சொன்னாரு.

ஏன் நீங்களும் அவங்கள மாதிரி அரசியலுக்கு வர போறீங்களா?னு கேட்டேன்.

அதுக்கு அவரு, “இல்லப்பா, எவ்ளோதான் பணிந்து, குனிந்து போனாலும், டெல்லியில் இருந்து வந்தவரு, அந்த ரெண்டு பேர கண்டுக்கவே இல்லையாம். ஏன் இப்படி இருக்காங்கனு தோனுச்சு…

அதே மாதிரி தான்… இப்போலாம் வீட்டுல யாரும் என்ன கண்டுக்கவே மாட்டேங்குறாங்க. ஆனாலும் அதப்பத்தி கவலப்படாம சோறு சாப்பிட நேரா அவங்க முன்னாடி தான் போய் நிக்குறேன். ஒருவேள எனக்கு சூடு சுரணையெல்லாம் போயிருச்சோனு தோனுது?” என்றார்.

ADVERTISEMENT

எனக்கும் அப்பப்ப அப்படிதான் தோனுது… ’ஏய் சோனமுத்தா உனக்கும் போச்சா’னு எனக்கு நானே கேட்டுக்கிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Sasikumar J

ப்ரெண்ட் ஒருத்தன் அவங்க ஆபீஸ்ல on-site அனுப்பி இருக்காங்கன்னு தாய்லாந்து போறான் அவங்க வீட்லயும் சரின்னு ஒத்துகிறாங்க அதுவும் ஒரு வாரம் தான் சொன்னா நம்புறாங்க..!

ADVERTISEMENT

எப்படி தான் சொல்லி நம்ம வைக்கிறாங்கனு தான் தெரியல…!!

செங்காந்தள்

முதல்முறையாக சமைத்தல் மகிழ்ச்சி

ஆனால் சமைத்தல் அன்றாட நிகழ்வாகி விட்ட பிறகு இருப்பதில்லை…!!!

Mannar & company™🕗

காஞ்சிபுரதில் நெசவாளர்கள் குறைகளை கேட்டறிந்தார் பாமக தலைவர் அன்புமணி,

பதிலுக்கு நெசவாளர்கள் அப்பா ராமதாஸ் குறைகளை கேட்டறிந்தார்களா?!

Mannar & company™🕗

என்னங்க சார்.. பக்கத்து வீட்டில் கணவன் மனைவிக்குள்ளே அடிதடி ரகளை நடந்திருக்கு யாரும் போயி என்ன ஏதுன்னு கேட்காம இருந்துருக்கீங்க?

அவங்க வீட்டில் தலைவன் தலைவி படம் ஓடுதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்துட்டோம் சார்!

ஒபாமா

இப்ப எல்லாம் யார் சார் ஜாதி பாக்குறாங்க ?

~ யோவ்…யோவ்…தமிழ்நாட்டுல ஜாதி வெறி இல்லாத ஊரே இல்ல… முதல்ல அத புரிஞ்சிக்கோங்க…

நெல்லை ஆணவக்கொலை

Mannar & company™🕗

திங்கட்கிழமை வந்தால் வேலைக்கு போகணுமேங்கிற பயம் வரும்.

திங்கட்கிழமையோட அது முடிஞ்சிருமா..?!

அதான் இல்ல அதில் பாதி செவ்வாய்க்கிழமையிலும் வரும்.

செவ்வாய்கிழமையோடயாவது முடிஞ்சிருமா?!

அதான் இல்ல அதில் கொஞ்சம் புதன்கிழமையும் வரும்!

டீ

நிறைய வருடங்களாக தேங்காய் எண்ணெயின் விலையை விட நல்லெண்ணையின் விலை இரண்டு மடங்காக விற்றுக் கொண்டு இருந்தது.

தற்போது நல்லெண்ணையின் விலையை தேங்காய் எண்ணெய் முந்தி விட்டது.

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு!

balebalu

ஏண்ணே அவனை அடிக்குறீங்க

இனிமே ஐஜி ய தெரியும் ன்னு சொல்லாம
சனாதன வேதம் தெரியும் ன்னு சொன்னா
எந்த தப்பு பண்ணாலும்
போலீஸ், கோர்ட்டு கேஸ் இருக்காதா ன்னு கேக்குறாம்ப்பா

செங்காந்தள்

பள்ளிக்கு மாணவ – மாணவிகள் வீட்டுப்பாடம் செய்யாத நோட்டுப் புத்தகங்களோடு,

பொய்களையும் சுமந்து வருகிறார்கள்…!!!

சோ தர்மன்

கோவில்பட்டி பழைய பஸ்டாண்டிற்கு எதிரே திருநெல்வேலி மெயின் ரோட்டில் “செட்டியார் மெஸ்” என்று ஒரு ஹோட்டல் கடை இருக்கிறது. அந்தக்கடையின் அருகிலேயே இன்னொரு மெஸ் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு பெயர் “ஒரிஜினல் செட்டியார்” மெஸ்.

செட்டியார் மெஸ்ஸில் “சைவம் “என்று போட்டிருந்தார். ஒரிஜினல் செட்டியார் மெஸ்ஸில் “சுத்த சைவம்” என்று போட்டார்.

இன்று ஒரிஜினல் செட்டியார் மெஸ்ஸிற்கு சாப்பிடப் போனேன். விலைப்பட்டியலில் வித்தியாசமான ஒரு தோசையின் பெயர் கண்ணில் பட்டது. “வடிவேல் தோசை” சர்வரைக் கூப்பிட்டு விசாரித்தேன். ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஹோட்டலுக்கு சாப்பிடப் போவாராம். தோசையில் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் எப்படி சுட்டு எடுக்க வேண்டும் என்று சர்வரிடம் சொல்லுவாராம். அந்த தோசை தான் சார் இது. அதே மாதிரி செய்து கொடுப்போம் ஒரு தோசை 90ரூபாய் விலை என்றார்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share