’அட அம்புட்டு பேரும் சண்ட தான் போடுறிங்களா?’ – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls july 27

வீட்டம்மா அவங்க அம்மா ஊருக்கு போயிட்டா. ஆடி மாசம்னு இல்ல, சண்டை போட்டு போயிட்டாங்க.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா ரொம்ப போர் அடிச்சது. சரி தியேட்டர்ல என்ன படம் ஓடுதுனு விசாரிச்சேன்.

நண்பர் ஒருத்தர், “போய் தலைவன் தலைவி பாரு. படம் புல்லா சண்டை தான்’னு சொன்னாரு. நானும் மேட்னி ஷோக்கு போயிட்டேன்.

ADVERTISEMENT

அங்க போன அப்புறம் தான் புரிஞ்சது… அது வில்லனுங்க கூட இல்ல… புருஷன் பொண்டாட்டி சண்டைனு. ஒரு நிம்மதி… அதுவரை நாம மட்டும் தான் சண்ட போட்டுட்டு இருக்கோம்னு தோனுச்சி… ஆனா தியேட்டருல இருந்த அத்தன பேரும் கத்தி சிரிக்கும் போது தான், அம்புட்டு பேரும் சண்ட தான் போடுறாங்க’னு புரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

சரவணன். 𝓜

ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்ன்னு பிரதமர் மோடி சொல்றாரு..

வடக்குல என்ன தேவையோ அதை சொல்லி மக்கள்கிட்ட ஓட்டை கவரும் பாஜக தமிழ்நாட்டில் மட்டும் எப்பவும் எதிராவே யோசிக்கறாங்க, செயல்படறாங்க..

ADVERTISEMENT

கோயில்ல உருளாம குழாயடில உருண்டு என்ன பிரயோஜனம்? இவனுங்க திருந்த வாய்ப்பே இல்ல…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தினமும் சிறிதுநேரம் திரும்பி பார்..

யார் மாப்ள சொன்னது..? தத்துவ மேதை சாக்ரட்டீஸா அரிஸ்டாட்டிலா..?

சாக்ரட்டீஸா..? கழுத்து வலிக்கு டாக்டர் கிட்ட போனபோது, தினமும் கொஞ்ச நேரமாவது போன் நோண்டறதை நிப்பாட்டிட்டு கழுத்துக்கு பண்ண சொன்ன எக்சர்ஸைஸ் மாமா.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும்,

வீக்எண்டுல ஆட்டம் போடறவன் திங்கட்கிழமை வந்தா வொர்க் பிரஷர்ல தவிக்கனும்.

செங்காந்தள்

சோலார் சக்தியை உணவு தயாரிக்க முதன்முதலில் பயன்படுத்தியவை

தாவரங்கள்தான்…!!!

Sasikumar J

~ என்ன வழக்கத்தை விட வரிசையில் அதிகம் பேர் நின்னுட்டு இருக்காங்க…!

~ எங்க ரேசன் கடையிலயா…!

~ இல்ல கறி கடையில…!!

#ஞாயிற்றுக்கிழமை

கடைநிலை ஊழியன்

போட்டோக்களை அழகாய் எடுக்கும் எந்த ஒரு செல்ஃபி கேமராவும்,

மனிதர்களின் உண்மையான முகங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை !!

ச ப் பா ணி

அதெப்படினு தெரியல மாசக்கடைசி வந்துட்டா போதும்..

எல்லா வெட்டிச் செலவும் வந்து ஜிங்குச்சா ஜிங்குச்சானு Group Dance ஆடுதுனு தெரியல…

ஜெயராமன்

மதுரை ஆதீனம் 60 வயதை தாண்டியவர், எனவே அவர் வழக்கில் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை என நீதிபதி உத்தரவு.

போலீசார் அவர் இருப்பிடம் சென்று விசாரிக்க உத்தரவு இடப்பட்டது.

இது 60 வயதானவர்களுக்கு கோர்ட்டு தந்த அதிரடி சலுகைத் தீர்ப்பு..!

இனிமேல் 60 வயதுக்கு மேலே ஆன அக்யூஸ்டுகள் யாரும், கோர்ட்டு 3 சம்மன் அல்ல… 30 சம்மன் அனுப்பி உங்களை கூப்பிட்டாலும் சரி… கோர்ட்டில் போய் ஆஜராக வேண்டியதில்லை.

ஏனெனில்… 60 வயது ஆகிவிட்டால்… கோர்ட்டே உங்கள் இருப்பிடம் வந்து உங்களை விசாரணை செய்யும்.
நீங்கள் படுத்துக்கொண்டே பதில் கூறலாம்.

முந்தைய நிகழ்வு ஒன்றை நினைவுக்கு.

ஸ்டான் சுவாமி என பிரபலமாக அறியப்பட்ட பாதிரியார் ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி தன் 84 வயதில், நடுக்குவாதம் மூலம் பாதிக்கப்பட்டு பலமுறை ஜாமீன் கேட்டும் கொடுக்காமல் மனுக்களை தள்ளுபடி செய்து, கடைசியில் டம்ளரில் உள்ள தண்ணீரை கையால் எடுத்துபிடித்து குடிக்க முடியாமல், தண்ணீரை உறிஞ்சிக் குடிக்க ஒரு ஸ்ட்ரா கேட்டார். அதைக்கூட கொடுக்காமல் அவரை தாகத்தில் சாக அனுமதித்த நீதிமன்றம், இப்போது 60 வயது என்றாலே சலுகை என்கிறார்கள்.

இந்த சலுகையை… அனைத்து மதத்தின் 60 வயது ஆனவர்களுக்கும் சட்டப்படி கொடுக்க வேண்டும். கொடுத்துதான் ஆக வேண்டும்.

மக்களே….. உஷார்!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share