தலைவன் தலைவி கதை தெரியுமா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் சோகமா இருந்தாரு. என்னனு கேட்டேன்.
தலைவன் தலைவி படம் பாக்க போயி நல்லா மாட்டிகிட்டேன்யானு சொன்னாரு.

’ஏன் மாப்ள, படம் நல்லா இருக்கு, விஜய் சேதுபதி – நித்யா மேனன் நல்லா நடிச்சிருக்காங்க’னு சொன்னாங்களே..?

ADVERTISEMENT

’அதெல்லாம் சரிதான்யா, தலைவன் தலைவி படத்துக்கு தான் இங்கிலீஸ்ல ’Mrs & Mr’னு போஸ்டர் ஒட்டிருக்காங்கன்னு நினைச்சு அங்க போயிட்டேன். உடனே வெளியே வந்துருலாம்னு தான் நெனச்சேன். வீட்டுக்கு போய் அவகிட்ட அடி வாங்குறதுக்கு, படத்தையே பாத்துருலாம் அங்கயே இருந்துட்டேன்’னு சொல்லி வருத்தப்பட்டாரு…

இதுக்கே வருத்தப்பட்டா எப்படி? நீ வேலைக்கு போகாம தியேட்டருக்கு போனது உன் mrs-க்கு தெரிஞ்சி துடைப்பக்கட்டையோட வந்துட்டு இருக்கா’னு தான் சொன்னேன். நண்பர் எஸ்கேப் ஆயிட்டாரு…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Mannar & company™🕗

தாய்லாந்து கம்போடியா இடையே போர் – செய்தி

ADVERTISEMENT

இருக்குற போரே இன்னும் முடியல இதுல இந்த அக்கப்போர் வேறயா?!

▶படிக்காதவன்™✍

அடிச்சி துவைக்கிற துணி மாதிரிதான்
நம்ம வாழ்க்கையும்
என்ன ஒண்ணு
வெளுத்தபாடுதான் இல்ல…

▶படிக்காதவன்™✍

தனித்து போட்டியிட்டால் 234 தொகுதியிலும் தேமுதிக’தான் வெற்றிபெறும் ~ பிரேமலதா விஜயகாந்த் – செய்தி

கனவா இருந்தாலும் கூட ஒரு நியாயம் வேண்டாமா…

செங்காந்தள்

கீழடி அகழாய்வு அறிக்கை தாமதம் ஏன்?
திருச்சி சிவா.

வேறென்ன உள்ளடி தான்…!!!

சரவணன். 𝓜

ஒத்த கருத்து உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி.

~ ஒத்த கருத்துன்னா?

அதான்.. ரெய்டுக்கு பயப்படறவங்க…

Mannar & company™🕗

பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு, நிம்மதியா இருக்கனும்னு தலைவன் தலைவி படத்துக்கு போனியே படம் எப்படி இருந்தது?

அந்த படத்துலேயும் புருஷன் பொண்டாட்டிக்கு ஒரே சண்டையாதான் இருந்தது!

✒️Writer SJB✒️

கடவுள் படைத்ததிலேயே ரெண்டு நல்ல விஷயம்

ஒன்னு சனிக்கிழமை இன்னொன்னு ஞாயிற்றுக்கிழமை..!

டிங் டாங்

பருப்புன்னா வெறுப்பு
ரசம்ன்னா வெசம்
கறின்னா சரி

ஞாயிற்றுக்கிழமை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share