ஜிபேக்கு ஜிஎஸ்டியா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls july 22

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க மாஸ்டர் ரொம்ப டென்ஷனா இருந்தாரு. என்னாச்சு மாஸ்டர்? ஏன் இப்படி கொதிக்கிறிய?னு கேட்டேன்.

அதுக்கு அவரு, “இல்லப்பா, இந்த ஜிபே வர்ற வரைக்கும் எல்லோரும் ஒழுங்கா தான் காசு வந்துட்டு இருந்துச்சி…

ADVERTISEMENT

ஆனா இந்த ஜிபே வந்தப்புறம்… எதுவுமே சரியில்ல… காசு அனுப்பிட்டு சொல்றானுவ… ஆனா அக்கவுண்ட்ல காசு ஏதும் வரமாட்டேங்க.. இப்போ ஏதோ ஜிஎஸ்டி போடுறாங்கனு சொல்லிட்டு இருக்கானுங்க…

அதுக்கு நான் கையிலேயே காசு வாங்கிட்டு போயிடுவேன். அதான் அந்த ஜிபே மெஷின தேடிட்டு இருக்கேன்’னு சொன்னாரு..

ADVERTISEMENT

சரி… என்கிட்ட கைல இல்ல… ஜிபேல தான் காசு இருக்குனு சொன்னேன். அதுக்கென்ன இப்போ… நாளைக்கு வந்து குடுப்பானு டீ போட ஆரம்பிச்சிட்டாரு… update kumaru memes and trolls july 22

நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. update kumaru memes and trolls july 22

ADVERTISEMENT

ச ப் பா ணி

மீ ~
My Pleasure ம் அவ்ளே
My Blood pressure ம் அவளே
My sugar ம் அவ்ளே
My sugar மாத்திரையும் அவளே

மை நண்பன் ~

உன் காதலியும் அவளே

இதெல்லாம் ஒரு கவிதையானு காரித்துப்பி உன்னை கொல்லப் போறவளும் அவளே…

✒️Writer SJB✒️

அதுதான் உன் மாமியார் வீடு அங்க போனதும் நீ எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கணும்,,

ஏம்பா நீங்க வச்ச பேரே நல்லா தான இருக்கு..?

ஜகாங்ஹீர்

யாரையாவது லவ் பண்றியா சொல்லித் தொலைடா அவளையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் உனக்கு பொண்ணு பாத்து பாத்து எனக்கு வயசே ஆயிடுச்சு ,

காலேஜ் படிக்கும் போது ஒருத்திய லவ் பண்றேன்னு சொன்னதும் செருப்பால அடிச்சிட்டு இப்போ இப்படி பேசுறியேம்மா..?

பாலு

பொண்ணுங்க கிட்ட ஐ லவ் யூ சொல்லும்போது புடிக்கலனா செருப்பால அடிப்பாங்க
புடிச்சு போச்சுன்னா கல்யாணம் பண்ணி பூரிக்கட்டையால அடிப்பாங்க
ஆக மொத்தத்தில் அடிப்பாங்க..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

இங்கிலாந்து மான்செஸ்டர் பகுதியில் பாலத்தை கடந்தபோது டபுள் டெக்கர் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விபத்து – செய்தி

இதுக்கு தான் ‘மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டான்’ன்ற வசனம் கரெக்டா இருக்கு!

காவேரி

ஏம்பா, உன் பொண்டாட்டிய கூகுள்’னு கூப்புடுற…

நான் எப்ப எங்க இருந்தாலும் கரெக்ட்டா கண்டுபுடிச்சிருவா அதான்…

மரிய அந்தோணி ராஜ்

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், சமீபத்தில் நான் வாசித்த ஓர் அட்டகாசமான நாவல் என்றால், அது சுஜாதா எழுதிய “கரையெல்லாம் செண்பகப்பூ” தான்.

2008 இல்தான் சுஜாதாவின் எழுத்துகளை முதன்முதலில் வாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்பெல்லாம் சில பல காரணங்களால் அவர்மீது ஒருவிதமான ஒவ்வாமையே எனக்கு இருந்தது.
அண்ணன் ஒருவர் பரிந்துரைத்தால் உயிர்மை வெளியீடாக வந்திருந்த – ஐந்நூறு பக்கங்களுக்கும் மேல் இருந்த – சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கத் தொடங்கினேன். அந்தச் சிறுகதைத் தொகுப்பு எனக்குள் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தி, அவரது எழுத்துக்களை நான் விருப்பி வாசிக்கச் செய்தது.
இப்போது கரையெல்லாம் செண்பகப்பூ என்ற நாவலுக்கு வருவோம்.

நாட்டுப்புறப் பாடலைப் பற்றி ஆய்வு செய்வதற்காக கல்யாண ராமன் என்பவர் சென்னையிலிருந்து ஒரு சிற்றூருக்கு வருகின்றார். அவர் அவ்வூரில் இருக்கும் ஜமீன்தார் மாளிகையில் தங்குகிறார். எதிர்பாராமல் அங்கு ஒரு கொலை விழுகிறது. எதற்காக அந்தக் கொலை விழுந்தது, பின்னர் அதிலுள்ள மர்மம் எப்படி அகல்கின்றது என்பதுதான் நாவலின் மையக் கதை.
நாவலானது வாசிக்கத் தொடங்கிய ஒருசில வினாடிகளிலேயே வேகம் எடுக்கத் தொடங்கி விடுகின்றது.

நாவலை நேற்று இரவு வாசிக்கத் தொடங்கினேன். நாவலை வாசித்துக் கொண்டே வருகையில், நாவலில் வரும் கல்யாண ராமன் தான் தங்கியிருக்கும் ஜமீன்தார் மாளிகையில் இருக்கும் அமானுசிய சக்தியைக் கண்டு அஞ்சுவதை வாசித்துவிட்டு எனக்குள்ளும் அச்சம் தொற்றிக் கொண்டது. இதனால் நான் நாவல் வாசிப்பதை நிறுத்திவிட்டு, கடவுளிடம் வேண்டிவிட்டு, நன்றாகப் போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டேன்.

(ஏழு கழுதை வயதாகிறது, இன்னும் பேய் பயமா என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் நாவல் அப்படியொரு பயத்தை எனக்குள் ஏற்படுத்திவிட்டது என்று சொல்வதன் மூலம் என்ன மாதிரியான கதை, எவ்வளவு திகிலான நாவல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்).

காலையில் பயமெல்லாம் போயிருந்ததால் நாவலை மீண்டுமாக வாசிக்கத் தொடங்கினேன். நாவலின் முற்பகுதியில் போடப்பட்ட ஒவ்வொரு முடிச்சும் பிற்பகுதியில் அவிழ்ந்தபோது, அடிப்பொலி என்று சொல்ல வைத்தது.

கல்யாண ராமன், வெள்ளி (எ) வெள்ளையம்மாள், மருதமுத்து, ஸ்னேகலதா என்று வெகுசில கதாபாத்திரங்களே நாவலில் வந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒருவர் மற்றவர்மீது மோகமும் ஏக்கமும் கொள்கிறபோது சுஜாதா தன்னுடைய வார்த்தைகளில் புகுந்து விளையாடி இருக்கின்றார்.
கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல் என்றுதான் சொல்வேன்.

225 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை இரண்டு அல்லது மூன்று நேரங்களுள்ளாக வாசித்து விடலாம்;
ஆனால், என்னைப் போன்ற இளகிய இதயம் கொண்டவர்கள் இரவு நேரங்களில் இதனை வாசிப்பதைத் தவிர்க்கலாம்.

பிரகாஷ்

மேனேஜரும், மனைவியும் ஒரே மாதிரி தான்…

விளக்கம் கேப்பாங்க, விளக்கி சொல்வோம்…

ஆனா ஏத்துக்கவே மாட்டாங்க…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share