இன்னைக்கு டீக்கடைக்கு போகுற வழில, ஒருத்தன் மரத்தடில உக்காந்து அழுதுட்டு இருந்தான்.
என்னடானு கேட்டா, “அண்ணே இங்க பாருங்க… மழை வரணும்னு இந்த அரச மரத்துக்கும், அந்த வேப்பமரத்துக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க… ஆனா என்ன மாதிரி 90ஸ் கிட்ஸ்க்கு மேரேஜ் பண்ணி வைக்க தான் யாருமே இல்ல”னு கண்ணீரோட புலம்பிட்டு இருந்தான்.
நானே ஆடிக்கு என் பொண்டாட்டிக்கு ஊருக்கு போய்ட்டானு சோகத்துல இருந்தேன். ஆனா அவன் சொன்னத கேட்டதும்… ‘டேய் ஜஸ்ட் மிஸ்ஸு, நீ தப்பிச்சிட்டடா மாடசாமி’னு எனக்கு நானே சொல்லிட்டு, அவனுக்கு சீக்கிரத்துல கல்யாணம் நடக்கும்னு ஆறுதலா ரெண்டு வார்த்த சொல்லிட்டு, டீக்குடிக்க கூட்டி வந்துட்டேன்.
நீங்க அப்ட்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 21

✒️Writer SJB✒️
லவ்வர், பெஸ்டி, தோழி,
இந்த மூணுல எனக்கு நீங்க யார்?
நாலாவது,,
அப்படி ஒன்னும் இல்லையே?
அதான் நீ..!

காவ்யா
எப்பவுமே டிவிட்டரில் இருக்கீங்களே உங்க ஹஸ்பண்ட் ஒன்னும் சொல்ல மாட்டாரா?
சொல்லுவார்
என்ன சொல்லுவார் ?
சாப்பாடு ரெடி
வா சாப்பிடலாம் என்பார்..!

ஜனகராஜ்
இன்று சீமான்:- காமராஜர் இறந்த போது அதிகமாக அழுதது அண்ணாதுரை தான்
நாளை சீமான்:- ஜெயலலிதா இறந்தபோது அதிகமாக அழுதது எம்ஜிஆர் தான்..!

Sasikumar J
நல்ல அயர்ந்து தூங்குபவரை தட்டி தான் எழுப்பனும் இல்ல;
பாத்தரங்களை உருட்டி உருட்டி கூட எழுப்பலாம்…!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
செலவு செய்வது ஒரு பெரும் போதை. சிறுசோ பெருசோ வசதிக்கேற்ப எதாவது செலவு பண்ணிட்டே இருக்கனும்னு இந்த கார்ப்பரேட் கம்பெனிக நம்மளை அடிமை ஆக்கி வைச்சுருக்காங்க போல…

கோவிந்தராஜ்
ஹோட்டல் கிராமத்து விருந்து..
என்ன இருக்கு..
சிக்கன் ஷேஷ்வான் இருக்கு. சிக்கன் 65,. தந்தூரி இருக்கு. ருமாலி ரொட்டி பன்னீர் பட்டர் மசாலா, கடாய் சிக்கன், கிரில்..
இதெல்லாம் எந்த கிராமத்து விருந்துய்யா 🥺🥺

Sasikumar J
~ டேய் மணியா…
வலையில் மாட்டாத மீன்,
உலையில மாட்டும்…!
~ என்னங்க சொல்லுறீங்க புரியலையே…!
~ முதல் நாள் வச்ச மீன் குழம்பு அடுத்த நாள்தான் டேஸ்டா இருக்கும் அதெல்லாம் உனக்கு புரியாது…!

Black cat
எங்கள் வீட்டு அருகில் உள்ள அண்ணா அழுதார் என்பதற்கு பதிலாக…
அறிஞர் அண்ணா அழுதார் என்று தவறுதலாக கூறி விட்டேன்…
மன்னிக்கவும்…

ராமசுப்பு
11 ஆண்டுகளுக்கு முன்பு புதியதலைமுறை இதழுக்காக பிரக்ஞானந்தாவை பேட்டிகண்டேன். அப்போது சென்னை ஓபன் போட்டி என்று நினைவு அதில் வென்ற ஏழெட்டு வயதேயான குட்டி பையனாக நெற்றி நிறைய விபூதியோடு குறும்புத்தனமாகப் பேசினான். பேட்டி முழுக்க அவனுடைய அம்மாதான் அதிகமும் பேசி இருப்பார்.
அப்போதே மகனை விட அந்த அம்மாவுக்குதான் நீண்டகால கனவுகளும் ஆர்வமும் திறமைசாலியான தன் மகனை விஸ்வநாதன் ஆனந்தைப்போல ஆக்கவேண்டும் என்கிற இலக்கும் இருந்தன. அதை அந்தப் பேட்டியிலும் சொல்லி இருப்பார். இந்தப்படத்திலும் அந்த அம்மாவின் ஆர்வத்தைப் பார்க்க முடியும். தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் தன் மகனின் கனவுகளுக்கே ஒப்புக்கொடுத்தவரின் தொடக்ககாலம் அது.
அவனுடைய அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு முழுவதுமாக அவனை சதுரங்கத்துக்கு ஒப்புகொடுத்தார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த பையனை மேலும் மேலும் முன்னேற்ற ஒவ்வொரு சர்வதேச போட்டிக்கும் ஸ்பான்சருக்காக அலைந்து திரிந்த அந்த அன்னையின் அலைச்சலைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தனை அலைச்சல்களிலும் ஒருநாளும் மனதை தளரவிடாது விடாப்பிடியாக இருந்தார். எல்லா கதவுகளையும் தட்டிக்கொண்டே இருந்தார்.
இன்று மகன் மிக பெரிய உயரத்தை எட்டி இருக்கிறான். இரண்டாமிடம் என்றாலும் பிரக்யானந்தா எட்டி இருக்கிற உயரம் மிகப்பெரியது. அந்த உயரத்திற்கு பின்னால் நாகலட்சுமி என்கிற அந்த அம்மாவின் உதிரமும் உழைப்பும் இருக்கிறது.
படித்தேன் பகிர்கிறேன்
லாக் ஆஃப்