இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். புதுமாப்பிள்ளை ரொம்ப சந்தோசமா இருந்தான். என்னடா இது, முந்தா நேத்து தான், பொண்டாட்டி ஊருக்கு போயிட்டானு அழுதுட்டு இருந்தான். இன்னைக்கு ஜாலியா சாட் பண்ணிட்டு இருக்கானே’னு பாத்தேன்.
பக்கத்துல போயி… ‘என்னப்பா ஜாலியா இருக்கா… வீட்டம்மா அதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுச்சா?னு கேட்டேன்.
அதுக்கு அவன், “நீங்க வேற ஏண்ணே, அவள ஞாபகப்படுத்திட்டு இருக்கீங்க… இப்போதான் நிம்மதியா இருக்கேன்… ஃப்ரீயா சாட் பண்ண முடியுது… ப்ரீயா ஊர் சுத்த முடியுது… ஃப்ரீயா பசங்க கூட விளையாட முடியுது… இந்த ஆடியோட, ஆவணிலயும் அவங்க அம்மா வீட்டுலயே இருக்குற மாதிரி ஐதீகம் ஏதும் இருக்காண்ணே”னு கேட்டான்.
”அதுக்கு அவசியமே இல்லப்பா… நீ பேசுறது எல்லாம் அவ என் மொபைல் வழியா கேட்டுக்கிட்டு தான் இருக்குறா”னு சொன்னேன். ஆளு செதறிட்டான். update kumaru memes and trolls july 20
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 20

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன்டா அந்த அமைச்சரை பதவில இருந்து தூக்கிட்டாங்க..?
அவர் நேத்து புது ஏசி வாங்கின சிசிடிவி புட்டேஜ் சோஷியல் மீடியால வைரலாகிருச்சாம்..

Sasikumar J
ஞாயிற்றுக்கிழமை மட்டும் கறி கடை இருந்த வரைக்கும்
எல்லாருக்கும் கொழுப்பு கம்மியா தான் இருந்துச்சு…!

ச ப் பா ணி
My Dads Gift “னு எழுதியிருக்கிற
பெரும்பாலான பைக்குகள்
அப்பாவோட EMIல்
வாங்கியதாகத்தான்
இருக்கும்…

Mannar & company™🕗
இன்னிக்கி அங்கே சிக்கன் வாங்கலாமா.. இங்கே மட்டன் வாங்கலாமான்னு யோசிச்சா அது ஞாயிற்றுக்கிழமை,
இன்னிக்கி அவனை வேலை வாங்கலாமா.. இவன்கிட்ட வேலை சொல்லலாமான்னு நினைச்சா அது திங்கட்கிழமை!

Sasikumar J
காலங்காத்தால வீக்டேஸ்ல சட்னி அரைக்கும் போது எரிச்சல கொடுக்குற மிக்ஸி அதே வீகெண்ட்ல இஞ்சி, பூண்டு அரைக்கும் போது மகிழ்ச்சியை கொடுக்கும்…!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நமக்கு தான் ஞாயிற்றுக்கிழமை, Weekend, Long weekend எல்லாம்..
சலூன்கடைக்காரருக்கும் கறிக்கடைக்காரருக்கும், அதுதான் அவர்களின் திங்கட்கிழமை.

செங்காந்தள்
மழை பெய்யும் போது முளைக்கும் காளான்கள் குடைகள்.
மழை பெய்தபின் முளைக்கும் குடைகள் காளான்கள்…!!!

🤔எனக்கொரு டவுட்டு!?
நீ என்னவா ஆகணும்னா கேட்டா டாக்டர் ஆகணும்னு சொல்றது,
சரி நேத்து கொடுத்த ஹோம் ஒர்க் முடிச்சாச்சானு கேட்டா பல்லே காமிக்குறது.
திச் குட்டிஸ்..!

ச ப் பா ணி
உண்மையில் மதுவிலக்கை அமல்படுத்துவது மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களே
#குடிமகன்களுக்கு அனுமதி இல்லை
லாக் ஆஃப்