இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்தர் சோகமா பேப்பர் படிச்சிட்டு இருந்தாரு. என்ன செய்தி போய்கிட்டு இருக்குனு கேட்டேன்.
எலோன் மஸ்க்க நாடு கடத்த டிரம்ப் திட்டம் போட்டுருக்காராம்னு சொல்லிட்டு ஓ’னு அழ ஆரம்பிச்சிட்டாரு.
என்னானு கேட்டா… “கல்யாணம் ஆகி 3 மாசம் தாம்ணே ஆகுது… எலெக்சனுக்கு எப்படி டிரம்பும் – மஸ்க்கும் இருந்தாங்களோ அப்படி ஒண்ணா இருந்தோம்.
ஆனா இப்போ எது பண்ணாலும் திட்டுறா, ஆ.. ஊ..னா மூஞ்ச திருப்பிக்குறா… ஏறக்குறைய இப்போ டிரம்பும், எலோன் மஸ்கும் சண்ட போடுற மாறி நாங்க போட்டுக்குறோம். அதான் எலோன் நியூஸ் படிச்சதும் என் பொண்டாட்டி ஞாபகம் வந்துருச்சி”னு சொல்லிட்டு அழுறாரு…
ஆத்தி பிடிக்கலனா நாமளும் ’மஸ்க்’ தான் போலனு நெனச்சிட்டு.. வீட்டம்மாவுக்கு பிடிச்ச பிரியாணியோட கிளம்பிட்டேன். update kumaru memes and trolls july 2
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 2

சந்நியாசி
ஒரு மகேஸ்வரியால் ஏ டிஜிபி காரை ஆள் கடத்தலுக்கு சர்வசாதாரணமாக பயன்படுத்த முடிகிறது. ஒரு நிகிதா வால் ஒரு கஸ்டடி கொலையே நடக்க காரணமாக இருக்க முடிகிறது. இது மிகவும் கவலை தருகிறது.

ச ப் பா ணி
Patient ன்னு ஏன் சொல்றாங்கன்னு இப்ப தான் புரியுது….
எவ்ளோ பொறுமையா ஒக்காந்துருக்க வேண்டியதாயிருக்கு…..😏🚶

Mannar & company™🕗
இடியாப்பத்தைவிட பெரிய சிக்கல் இடியாப்பக்காரர்களை பிடிப்பது!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அடியேய்… சூடா ஒரு டீ போடு.. ஒரே தலைவலியா இருக்கு..
இந்த வேகாத வெய்யில்ல தலைவலி வர்ற அளவு அப்படி எங்க போயிட்டு வர்றீங்க..?
பிரண்ட்ஸோட போயி டீ சாப்பிட்டு வர்றேன்..

பச்சக்கிளி 🦜
“உன்ன பெத்த அப்பா தான சீக்கிரமா விதி வந்து போயிட்டாரு.. ஆத்தா உசிரோடதான இருக்கேன். நீ கெளம்பி வா. ஆனது ஆக வாரத பாத்துக்கலாம்”
நாலஞ்சு வருசமாச்சு. ஒவ்வொரு வரியும் வார்த்தை மாறாம காதுல கேக்குது. இப்படி யாராவது ஒரே ஒருத்தர் சொல்லியிருக்கலாம்.
செத்தது அவ இல்ல. அந்த குடும்பம்தான்

ச ப் பா ணி
நல்லா இருக்கீங்களா? எனும் கேள்விக்கு
‘உங்க அளவுக்கு இல்ல’ என்பதும் ஒருவித குரூர பதில்தான்

கோபால்
வடைல இருக்குற மிளகாயை தூக்கி வீசுற இந்த சமூகம் தான்…
மிளகாய் பஜ்ஜியை விரும்பி சாப்பிடுது…!!!
முதல்ல இந்த நிலை மாறணும்,,,,!!

பரமசிவம் ராமசாமி
டிரைவர் ,கண்டக்டர் ரெண்டு பேருக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம்…
கண்டக்டர், பயணிகள் கிட்ட காசு வாங்கி தனித்தனியா
டிக்கட் கொடுப்பார்…
டிரைவர் கொஞ்சம் நிதானம் தவறுனா…
மொத்தமா எல்லோருக்கும் மொத்தமா டிக்கட் கொடுத்துடுவார்…!!

கலாவதி
முடி நீளமா இருந்தா நல்லா இருக்கும்..
சுருள் சுருளா இருந்தா நல்லா இருக்கும்னு #பெண்கள் நினைக்கிறாங்க!!!
முடி இருந்தாலே நல்லா இருக்கும்னு #ஆண்கள் நினைக்கிறாங்க!!!

✒️Writer SJB✒️
எப்ப பாத்தாலும் இடுப்பு வலி கை கால் வலி மயக்கமா சோர்வா இருக்குன்னு சொல்றா
ஆனா புருஷன் கிட்ட சண்டை போடும்போது மட்டும் எங்க இருந்துதான் அவ்வளவு சக்தி வருதோ தெரியல..!
லாக் ஆஃப்