இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க புதுசா கல்யாணம் ஆனவரு போல, பொண்டாட்டிய அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்கன்னு கவலையோட டீ குடிச்சிட்டு இருந்தாரு.
இன்னொருத்தர், கல்யாணம் ஆகி ரொம்ப வருசம் ஆனா மாதிரி இருந்தாரு, அவரு, தன்னோட பொண்டாட்டி அவ அம்மா வீட்டுக்கு போகலயேனு கவலை,
சும்மாவே பொண்ணு கிடைக்காது, இந்த ஆடி மாசத்துல வயச 30 தாண்டிரும்… நமக்கு பொண்ணே கிடைக்காதோனு என்னை மாதிரியே விட்டத்த பாத்துகிட்டு இருந்து என் நண்பனுக்கு கவலை…
வீட்டுல அம்மாவுக்கு, அடிக்குற காத்துல மாடில வத்தல காயப் போட முடியலயேனு கவலை…
ஆக மொத்தம் இந்த ஆடி மாசம் எல்லோத்துக்கும் ஒரே அக்கப்போரா தான் இருக்கு போல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 18

Mannar & company™🕗
ஏன் தலைவரே..
கூட்டணிக்கு அந்தக்கட்சி, இந்தக்கட்சின்னு எல்லோரையும் கூப்பிடுறீங்களே ஒருவேளை அவங்கல்லாம் நம்ம கூட்டணிக்கு வரலைன்னு சொல்லிட்டா..?!
நாம அந்தக் கட்சிக்கு போயிட வேண்டியதான்!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
காசு பணம் செலவழிக்கும் விஷயத்தில் பொறுப்புடன் வளர்க்கப்படுபவர்கள், குழந்தை பருவத்திலிருந்து நேரடியாக முதுமை பருவத்திற்கு முதிர்சசி அடைந்து விடுகிறார்கள்.

javaan
அவங்க டூ இவங்க ~
அய்யா எங்களை காறி கூட துப்புங்க ஆனா எங்களோட கூட்டணி சேருங்க.. அடுத்த முதல்வர் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி எல்லாமே உங்க கட்சில இருந்து தான்… இது சத்தியம்!

Mannar & company™🕗
பக்கத்து வீட்டில் டிவி சத்தத்தை வழக்கத்திற்கு மாறாக கூட்டி வச்சிருந்தால்
அவங்க வீட்டில் சண்டை என அர்த்தம்!

காவ்யா
ஆடி மாசத் தள்ளுபடியில் புடவைகளை வாங்க வேண்டாம்னு
கணவன் சொல்றதைத்தான் மனைவி முதலில் தள்ளுபடி செய்வார்கள் !

Sasikumar J
பொண்டாட்டி கூலா இருந்தா தோசை சூடா இருக்கும்…!
பொண்டாட்டி சூடா இருந்தா தோசை கூல் மாதிரி இருக்கும்…!!

கவிஞர் சுகுமாரன்
இரண்டாம் பதிப்பில்லை
எனினும்
ஒரே வாழ்க்கையில் எத்தனை பிழைகள் ?

BINDU-ബിന്ദു.
மனதில் மறைத்து வைத்திருக்கும் நியாயமான கேள்விகளை எல்லாம் மறைக்காமல் கேட்டுவிட்டால்,
மருந்துக்குக்கூட ஓர் உறவும் நிலைக்காது.

ArulrajArun
கூட்டணி குள்ள கருப்பு ஆடு இருந்தா அது அந்த காலம்
கருப்பு ஆடு எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்தால் அது இந்த காலம்…
லாக் ஆஃப்