இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க எனக்கு தெரிஞ்ச புது மாப்பிள்ளை சோகமா உட்கார்ந்திருந்தான்.
”டேய் தம்பி, ஆடி மாசம்னா கல்யாணம் ஆன புது பொண்ணுங்க அவங்க அம்மா வீட்டுக்கு போறது வழக்கம் தானே… அதுக்கெல்லாம் சோகமா இருக்கலாமா? ஜாலியா இரு”னு சொன்னேன்.
அதுக்கு அவன், “அண்ணே நீங்க வேற… கல்யாணம் முடிஞ்சி தனிக்குடித்தனம் வந்துட்டோம். நாலு நாள் தான் ஆவுது. ஆடி மாசம்னு அம்மா வீட்டுக்கு போறவ, கையோட வீட்டு சாவியையும் கொண்டு போயிட்டா. எதுக்குனு கேட்டதுக்கு, “இந்த மாசம் நீ உன் பிரண்ட் வீட்டுக்கு போயிரு, கரண்ட் பில் மிச்சாமகும்”னு சொல்லுறா. ஆடி மாசம் ரொம்ப மோசம்ண்ணே”னு சொல்லி அழுதான்.
என்னத்த சொல்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 17

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏப்பா.. காமராஜர் வீட்ல ஏசி இருந்துச்சா இல்லையான்னு சண்டை போட்ட க்ரூப் போயிருச்சான்னு பாரு..
நீ இங்கதான் இருக்கியா..?
ஏன் நீ யாரு..?
நான்தான்டா காமராஜர் வீட்ல இருந்தது விண்டோ ஏசியா ஸ்பிளிட் ஏசியான்னு சண்டை போட வந்த அடுத்த க்ரூப்பு..

Cheems💥💥
2 டிகிரி
ஓரு லட்சம் சம்பளம்
ஒரு காரு
சொந்தமா வீடு
தனி குடித்தனம்
Sunday ஆனா outing
அவனே புள்ள பெத்துக்குற மாறி ஒரு மாப்பிள்ளை வேணும்…!!!!
90s கிட் மாப்பிள்ளை ~ அட போங்கடி….😏😏😏

Baske₹
ரோட்டில் கவனம் இல்லாமல் வண்டி ஓட்டுவதும்…
வீட்டில் துணைவரின் எண்ணம் தெரியாமல் குடும்பம் நடத்துவதும்..
சேதாரத்தை விளைவிக்கும்.

Black cat
என் பேர்ல எதுவும் loan வாங்கி இருக்கிங்களா தோழி .?
என்ன உளற
இல்ல நாளுக்கு நாள் உங்க மேல interest எரிகிட்டே போகுது..🤪

ச ப் பா ணி
யோசிச்சுப் பார்த்தா..
நிறைய யோசிக்கிறதுதான் அதிக பிரச்சனைக்குக் காரணம்..
இப்பதான் யோசிச்சேன்

manipmp
முடிந்தவரை கடன் வாங்காம சமாளிக்கணும்.
கடன் வாங்கினா, முடிந்தவரை கடன் கொடுத்தவரை சமாளிக்கணும்.

பாக்டீரியா
மீ ~ “அடர் இருளில் முழு நிலவு அழகு தான் மையிட்ட அவள் விழிகள்”
மை நண்பன் ~Hey fool கருவளையம்டா அது….

✒️Writer SJB✒️
கடவுளுக்கு ‘ல’ வுக்கும் ‘ழ’வுக்கும் வித்தியாசம் தெரியல
எப்படி சொல்றீங்க?
நல்ல வழியை காட்டுன்னு கேட்டேன் நல்ல வலியை காட்டிட்டார்..!

✒️Writer SJB✒️
இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 7 லட்சம் பேர் புகைபிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள்
எப்படி தெரியுமா ?
அவர்கள் செத்துப் போகிறார்கள்..!!!
லாக் ஆஃப்