இன்னைக்கு டீக்கடைக்கு போகுற வழியில ஒரு போர்டு பார்த்தேன். அதுல, ‘கடன் ரத்தாகும் அற்புத கூட்டம்… கட்டணம் 300… முன்பதிவுக்கு அழைக்கவும்’னு போட்டுருந்துச்சி.
அது எப்படி ரத்தாகும்… ஏற்கெனவே கடன்ல இருக்கிறவன் எதுக்கு 300 கொடுக்கனும்… இதுவரை பாத்ததே இல்லயேனு யோசிச்சிக்கிட்டே டீக்கடைக்கு போனேன். அங்க நண்பர் இருந்தாரு. அவருக்கிட்ட இத பத்திக் கேட்டேன்.
அதுக்கு அவரு… ”அது வேற ஒன்னும் இல்ல… இப்படி ஒரு போர்டு ரெடி பண்ணி, அத விளம்பரப்படுத்தி, தலைக்கு 300 ரூபா வசூலிச்சி, கூட்டத்தை 100 தடவை நடத்தினால் நடத்துறவரோட கடன் தானா ரத்தாயிரும்”னு சொன்னாரு…
அப்போ என் கடன் என்னாகும்?னு கேட்டேன். அதுக்கு இன்னும் டபுளா ஏறி நிக்கும்னு சொல்லிட்டு போறாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 15

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஜூலை 16 National Waffle Day வாம்.. எந்த வேலையா இருந்தாலும் அப்படியே ஸ்டாப் பண்ணிட்டு waffle சாப்பிட வாங்கன்னு ஒரு ரீல்ஸ்..
நம்ம நாட்டுல waffle எல்லாம் விக்கறாங்கன்னே எனக்கு இப்பதான்டா தெரியும்..

Mannar & company™🕗
வாழ்க்கை ‘peaceful’லா இருக்கும்னு பார்த்தால்,
வாழ்க்கை ஃபுல்லா ஸ்கூல் ‘fees’ கட்ற மாதிரி இருக்கு!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
Good morning ன்றதை வெள்ளைக்காரன் conversation க்கு ஒரு starting point ah யூஸ் பண்றான், நம்மாளுக அதையே ஒரு conversation ah பேசறானுக..

கோவிந்தராஜ்
Frd ~ எங்க போயிட்டு இருக்க..?
Me – உருப்படாமல் போயிட்டு இருக்கேன்..
Frd – சீக்கிரம் வா .. சேர்ந்து போவோம்

லாவண்யா
பொண்ணா பொறந்தா விருப்பம் இருந்தா மட்டும் வேலைக்கு போலாம்
ஆம்பளையா பொறந்தா விருப்பம் இல்லனாலும் வேலைக்கு போய் தான் ஆவணும்

Baske₹
ஆடி மாசம் காத்தடிக்க…
சென்னையன்ஸ் ~ எங்கப்பா காத்து அடிக்குது.. வெயில் தான் அடிக்குது

iQKUBAL
மச்சான், ஒரு 5000 இருந்தா குடுடா..
Me :~ டேய், ATM-ல மினிமம் 100 எடுக்கலாம். அதுக்கே எனக்கு இன்னும் 5 ரூவா வேணும்டா.. அக்கௌன்ட்ல 95 தான் இருக்கு.. 🥲

Sasikumar J
மனைவி வீட்டில் இருந்து யார் வந்தாலும் கணவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதில்லை ஆனால் அதுவே கணவன் வீட்டுல இருந்து யாரேனும் வருவதாக இருந்தால்…
See more….

Mannar & company™🕗
என்ன பெரிய Amazon, Flipkart Big Billion days offers..
ஆடித் தள்ளுபடி தெரியுமா உனக்கு?!

✒️Writer SJB✒️
யு பி ஐ மூலம் வாங்கும் பணத்துக்கும் ஜிஎஸ்டி கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசு
மீண்டும் பணமாக கொடுங்கள் என்று கேட்க ஆரம்பிக்கும் கடைக்காரர்கள்..!
அப்போ டிஜிட்டல் இந்தியாவுக்கு என்ன மரியாதை?

கனகராஜ்
நம்மை பார்த்தும் பார்க்காத மாதிரி போறது ரெண்டு பேர்
ஒன்னு நம்ம எக்ஸ்
இன்னொன்னு நம்மிடம் கடன் வாங்கியவர்..!
லாக் ஆஃப்