இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்த சோகமாக உட்கார்ந்திருந்தார். அவரிடம், “என்னாச்சு தல?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “ இன்னைக்கு வரலட்சுமி பூஜையாம், என் பொண்டாட்டி காலைலயே எந்திருச்சி எனக்காக பூஜை பண்ணி வேண்டிக்கிட்டா”
நல்லது தானே? என்றேன். அதுக்கு அவர், “நானும் அதே சந்தோசத்துல தான், ’இந்த காலத்துல எந்த பொன்னு புருஷனுக்காக வேண்டிக்கிறா…நா அவ்ளோ special ah ?’ அப்படினு கேட்டேன். அதுக்கு அவள், “அதுல்லாம் ஒன்னுமில்ல… நீ லட்சக்கணக்குல லோன் வச்சிருக்க… எதுலயும் பட்டுனு அடிச்சி பொட்டுனு போய்ற கூடாது. அதான் வேண்டிக்கிட்டேன்”னு சொன்னா பாருங்கா.. அதான் பகீர்னு ஆயிருச்சினு சொல்றாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

செங்காந்தள்
ப்ரோ… யாராவது தரவுகளோட கேள்வி கேட்டால்…?
திருப்பி தரவுகளோடு பதில் சொல்லனுமா?
அதுதான் இல்லை.
நேரு தான் காரணம் என்று ஆரம்பிக்க வேண்டும்.
அதையும் மீறி கேட்டால்…
அவர்களின் தனிப்பட்ட விசயங்களை ஊதி பெரிதாக்க வேண்டும்.
அதையும் மீறி கேட்டால்…
பேசவே முடியாத இடத்திற்கு அனுப்பி விட வேண்டும்…
ஆக மொத்தம் பதில் மட்டும் சொல்ல மாட்டீங்க ப்ரோ… அப்படிதானே?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கூலி படத்துக்கு FDFS டிக்கெட் புக் பண்ண வெய்ட் பண்ற உங்க உலகம் வேற…
அட அதை எவன்ப்பா அந்த கூட்டத்துல தியேட்டருக்கு போயி சீட்ல உட்காந்து பார்த்துட்டுன்னு சோம்பேறித்தனமா ஓடிடிக்கு வெய்ட் பண்ற எங்க உலகம் வேற ..

வாலுபையன்
ஓசில கரும்பு ஜூஸ் குடிச்சா கூட, சுகர் எதுவும் வராது தைரியமா குடிப்போம்னு மனசு தெம்பா இருக்கு.
ஆனா காசு குடுத்து ஒரு டீ வாங்கி குடிச்சா, High BP வந்த மாதிரி பதட்டமா இருக்கு,
இதுக்கு எதாவது மருந்து இருந்தா சொல்லுங்க…

செங்காந்தள்
இந்தியாவின் சார்பில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆங்கில பெயர் ifsdfhug…!!!

Mannar & company™🕗
Office-ல வேலை பண்ணறேன்னு சொல்லி Zoom On பண்ணுவான்,
Gym-ல Workout பண்ணறேன்னு சொல்லி Photo மட்டும்தான் போடுவான்,
Instagram-ல “நான் Busy Life வாழ்றவன்”ன்னு Caption போடுவான்,
ஆனா Weekend வந்தா Love failure songs கேட்டுட்டு நிற்பான்!
யார்ரா?
90’s கிட்ஸ்ங்க டா!

ஜான்சன்
வீக்எண்டு வரப்போகுதுன்னு எல்லாரும் சந்தோசமா இருக்காங்க, நீ மட்டும் ஏம்ப்பா சோகமா இருக்க..?
வீக்எண்டு முடிஞ்சதும் திங்கள்கிழமை வந்துருமே, அதான் சார் இப்பவே சோகமா இருக்க பழகிட்டு இருக்கேன்..

கஞ்சன்
”வீட்டு எண் 0.. தந்தை பெயர்: dfiggoidf”
டேய்.. இது சைதாப்பேட்டை டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்ல நான் தப்பு தப்பா பிராக்டீஸ் பண்ண alphabets டா..

ஜெகதீஷ்.கோ
சூர்யா கருப்பு பணத்த வைச்சு தான் உதவி பண்றார் மாப்ள..
அதைத்தான் ஜீ 10 வருஷம் முன்னாடியே ஒழிச்சுட்டாரே மாமா.. நீ தான பெரும பேசினே..

vijaychakkaravarthy

பூவேந்தன்
யம்மா..ரொம்ப பசிக்குது ரெண்டு தோச சுட்டு குடும்மா..
இன்னிக்கு வரலட்சுமி.விரதம்..
முடிஞ்சதும் சுட்டு தரேன்
எதுக்கு விரதம்
புருஷன் நல்லாருக்கனும்னு.
சபாஷ்..

💫Shahtweetz💫🇮🇳
வரலட்சுமி விரதம்னா என்னண்ணே …..
வீடெல்லாம் சுத்தம் செஞ்சு கோலம் போட்டு புருஷன் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டு விரதம் இருந்து பூஜை பண்ணிட்டு ……..
சாயங்காலமா கை கால்வலினு புருஷனை திட்ற பங்க்ஷன்டா ….
😂😂😂😂😂🤣🤣🤣🤣
லாக் ஆஃப்