இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க வந்த என் சொந்தக்காரர் ஒருத்தர், ‘மாப்ள உங்களுக்கு எத்தனை குழந்தை‘னு கேட்டாரு. அப்படி ஒன்னும் இல்ல மாமானு சொன்னேன்.
அடுத்து ‘எத்தனை கல்யாணம் பண்ணிருக்கீங்க?’னு கேட்டாரு… ”ஏதே எத்தனை கல்யாணமா? யோவ் மாமா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல”னு சொன்னேன்.
அதுக்கு அவரு, ”என்ன மாப்ள இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க… காலாகாலத்துல கல்யாணம்லா பண்ணிக்கனும்”னு சொன்னாரு…
”அப்படியா மாமா, உங்க பொண்ண வேணா எனக்கு கட்டி கொடுப்பீங்களா”னு தான் கேட்டேன்.. ஆளு நைசா எஸ்கேப் ஆகி ஓடுறாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒவ்வொரு இந்திய தம்பதியினரும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் -மோகன் பகவத்
செலிப்பிரட்டீஸ் சிலர் ~
அய்யா, அப்படியே ஒவ்வொரு இந்திய குடிமகனும் 3 கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு அறிக்கை விடுங்கய்யா..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நிறைய பொருட்கள்ல ‘Best before’ ன்னு எழுதிருக்க தேதிக்கு அப்புறம் அது கெட்டு போயிரும்னு சொல்வாங்க…
ஆனா ஒரு சிலருக்கு,
அந்த பொருள் தீர்ற வரை யூஸ் பண்ணலாம்னு நினைக்குறாங்க…

Mr. Vetti
விநாயகர் ப்ரோ ~
இரண்டு நாள் கொழுக்கட்டை, கடலை, லட்டுனு நல்ல உபசரிப்பு சார்..
மூனாவது நாள் வாடா வெளியனு கூப்பிட்டு ஆத்து தூக்கிப்போட்டு போய்ட்டானுங்க சார்…😭

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சாமிக்கே ரெண்டு பொண்டாட்டின்னு கதை கேட்டு வளர்ந்த சமூகம்ய்யா இது.. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை !!

Mannar & company™🕗
“சமையல் பண்ற ஆண்களை கல்யாணத்துக்கு முன்னாடி ‘குக்’கா பாக்குறாங்க, கல்யாணத்துக்கு அப்புறம் ‘கோமாளி’யா பாக்க ஆரம்பிச்சுடுறாங்க!”

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒரு புது டிரஸ் நன்றாக உள்ளதாக பிறரால் பாராட்டப்படும் போது, அதன் பின் அடிக்கடி உடுத்தப்படும் வாய்ப்பை இழந்து விடுகிறது.

ச ப் பா ணி
இன்றைய தலைமுறைக்கு வல்லினம்,மெல்லினத்தை விட
‘செல்லினமே’ தமிழை நன்கு கற்றுக் கொடுத்திருக்கிறது

நெல்லை அண்ணாச்சி
தமிழகத்தில் இருந்து சென்ற 500 டன் இறால்களை “திருப்பி” அனுப்பிய அமெரிக்கா – செய்தி
வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி!!!

நெல்லை அண்ணாச்சி
” சாவி ” கொடுத்தால்
ஆடும் பொம்மை தேர்தல் கமிஷன் “
# சின்ன திருத்தம்..” Remote “

✒️Writer SJB✒️
10% ஆண்களுக்கு மட்டும் காதலி மனைவியாகிறாள்,,
90% ஆண்களுக்கு காதலி சோசியல் மீடியா ஐடி பாஸ்வேர்ட் ஆகிறாள்..!
லாக் ஆஃப்