இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் வந்து, ”ரெண்டோட நிறுத்தக்கூடாதுனு அவரு சொன்னாரு பாத்தியா?னு கேட்டாரு.
”எது கல்யாணத்தையா?னு கேட்டேன். ”ஏன் ஏற்கெனவே அப்படி சிக்கி சீரழிஞ்சவங்க பத்தாதா? குழந்தைகளை ரெண்டோட நிறுத்தக் கூடாதாம். மூனு பெத்துக்கனுமாம்”னு அவரு சொல்றாருனு சொன்னான்.
யாருப்பா அந்த அவரு… அவருக்கு கல்யாணம் ஆயிருச்சானு கேட்டேன். “மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தான் அப்படி சொன்னாரு.. அவரு கல்யாணம் பண்ணிக்கல”னு சொன்னார்
அது சரி… அப்ப 3 என்ன, முப்பது பெத்துக்க கூட சொல்லுவாரு… இவங்க போடுற ஜிஎஸ்டில, இருக்குற விலைவாசி ஒரு புள்ள பெத்த மாசக் கடைசில ட்ரவுசர் கிழியுது. நல்லா சொன்னாங்க… போப்பா அங்குட்டு”னு கிளம்பி வந்துட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதிகமா சிரிக்காதவங்க தான் உண்மையில சந்தோஷமா இருக்கறதா அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒவ்வொரு இந்தியதம்பதியினரும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் -மோகன் பகவத்
# ஏற்கனவே asdfgh க்கும் ikjhj க்கும் பொறந்து வீட்டுநம்பர் 0 ல ஓட்டுரிமையோட வசிக்கற லட்சக்கணக்கான குழந்தைகளுக்கே வாழ வழியில்லாத போது, இன்னும் குழந்தைகளா பெத்து போட்டா, அம்பானியா தத்து எடுத்து வளர்ப்பான்?

▶படிக்காதவன்™✍
பீரோவ திறந்து துணியெல்லாம் பாத்துட்டு இது நாம வாங்கி வச்ச சேலையானு பெண்களை யோசிக்க வைக்கிறது எங்கயாவது கல்யாணத்துக்கு போகும்போது மட்டுமே…

Mannar & company™🕗
இரண்டாவது நாளும் மீதமான சுண்டலை அப்பாவுக்கு சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்ள மனைவி வைப்பதை பார்த்த மகன்..
அப்பாகிட்ட ஏதாவது சொல்லணுமாப்பா..
இல்லைப்பா!!

Mannar & company™🕗
“தங்கம் purity measure பண்ணுறது ‘carat’லங்கறது எல்லோருக்கும் தெரியும்,
ஆனா மனிதனை purity measure பண்ணுறது “character”ல தான்ங்கறது யாருக்கும் தெரியிறதில்லை!”

கடைநிலை ஊழியன்
இந்த harpic காரன் எவ்ளோ சேல்ஸ் பண்றான், எவ்ளோ காசு வச்சுருக்கான் னு தெரியல..
தலைவன் அப்பாஸ் ல இருந்து இப்ப ஷாருக்கான் வர விளம்பரத்துல இறக்கிருக்கான்..

✒️Writer SJB✒️
எவ்வளவு வலி ஏற்பட்டாலும் பெண்கள் கண்ணீர் விட்டு அழுவதில்லை ஏனென்றால் மஸ்காரா விலை மிக அதிகம்🫣
லாக் ஆஃப்