இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தன் போன்ல… நாம நாளைக்கு கம்யூனிஸ்ட் ஆபிஸ் போவோம்னு சொல்றான்.
இன்னொருத்தன், மறக்காம பாஜக ஆபிஸ் வந்துரு… நான் ரெடியா வெயிட் பண்ணிட்டு இருப்பேனு சொல்லிட்டு இருந்தான்.
இவங்கள எல்லாம் அடிச்சி இழுத்துட்டு போனாக் கூட, அரசியல் பக்கம் தல வச்சி படுக்க மாட்டானுங்க… இப்போ என்னாச்சி… ஒன்னும் புரியலேயேனு அவனுங்கிட்டயே கேட்டேன்.
அதான் அந்த கட்சி தலைவர்கள் காதல் ஜோடி வரலாம்னு சொல்லிட்டாங்கல… அதான் நாளைக்கு வீட்டை விட்டு ஓடிப்போயி, அங்க கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்னு சொல்லிட்டு அவசரமா தாலி வாங்க ஓடுறான்…
ஓஹோ இப்படியும் அரசியல்படுத்தலாமா?
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Mannar & company™🕗
பழக்க தோஷத்தில் சிவகார்த்திகேயன் ‘கேப்டன் பிரபாகரன்’ படக்குழுவினர்களை கூப்பிட்டு பாராட்டு தெரிவிக்கப் போகிறார்!
அவர யாராச்சும் கட்டுப்படுத்துங்க…

கோவிந்தராஜ்
ஆயிரம் ரூபா கையில இருந்தா எத வாங்கலாம்ன்னு தோணும்.
அதே நோட்டு கிழிஞ்சி இருந்தா இத
எவன் வாங்க்குவானு தோணும்.
இதான்ங்க வாழ்க்கை..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஈமெயில் ஆகட்டும் ட்வீட் ஆகட்டும்,
அனுப்பிய பிறகே அதிலுள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நம் கண்களுக்கு தெரிய வரும்.

Mannar & company™🕗
நிலாவுல பாட்டி வடை சுடுறாங்கன்னு சொன்னப்ப மட்டும் இனிச்சுது..
அனுமன்தான் முதன்முதலில் விண்வெளிக்கு போனார்னு சொன்னா மட்டும் கசக்குதோ..!!
–சங்கிஸ்

mohanram.ko
தெருநாய்களை சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்! – தெருநாய் ஆர்வலர்கள்
இதுக்கு ஒரு டியூஷன் சென்டர் ஆரம்பிச்சா, செமையா கல்லா கட்டலாம்… ஐடியா இல்லாத பசங்க

சரவணன். 𝓜
அதோ போறாரே அவர் தான் நாய் ஆர்வலர்..
~ எப்படி சொல்றே?
எப்பவும் கார்ல மட்டும் தான் போவாரு…!

வசந்த்
இப்பலாம் மனைவி கிட்ட சாம்பார் சரி இல்ல, ரசம் சரி இல்லனு சொல்ல முடியல உடனே அடகு வச்ச நகையை திருப்பிக் குடுன்னு கேட்குறாங்க.

செங்காந்தள்
நெடுநாட்களாக பூட்டிய வீட்டிற்குள் இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள்…!!!

✒️Writer SJB✒️
அஞ்சு ரூபா பேனாவுக்கு நூல் கட்டி வைத்து
பத்து ரூபா டம்ளருக்கு சங்கிலி போட்டு வைத்து
பல்லாயிரம் கோடி ரூபாய் வாராக் கடன் கொடுக்கும் இடத்துக்கு பேங்க் என்று பெயர்.

✒️Writer SJB✒️
அரேஞ்ச் மேரேஜ் பண்ணும் போது மட்டும் மாப்பிள்ளைக்கு உத்தியோகம் இருக்கா,
சொந்த வீடு, பேங்க் பேலன்ஸ், கார், இருக்கான்னு கேட்க வேண்டியது
ஆனா காதலிச்சு ஓடி போறது மட்டும் பொறுக்கி,மொள்ளமாரி, முடிச்சவிக்கி பசங்களோட,
ஏன் அமைச்சரே?
அதான் காதலுக்கு கண் இல்லையே மன்னா.!
லாக் ஆஃப்
