Mannar & company™🕗
இந்த மழை கிட்ட பிடிக்காத விஷயமே இதுதான்,
ராத்திரி பூரா பெய்த மழை ஸ்கூலுக்கு போகும்போது சரியா நின்னுடுது
பிறகு எப்படி மழை பெய்யுதுன்னு கலெக்டர் லீவு கொடுங்க!
மழையே இது நியாயமா?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தமிழில் பேச முடியாததிற்கு வருந்துகிறேன் – அமித்ஷா
தமிழ்நாடு பி லைக் : ரொம்ப சந்தோஷம், மகராசனா இருப்ப 🙏

▶படிக்காதவன்™✍
வரும் தூக்கத்தை கெடுக்க
நினைவுகள் மட்டுமல்ல
இருமல் கூட போதுமானது…

செங்காந்தள்
திருக்குறளின் வழி நின்று ஆட்சி நடத்தி வருகிறார் நமது பிரதமர் மோடி அமைச்சர் அமித்ஷா.
வள்ளுவர் குறைந்த வரியில் நிறைய பொருள் தந்தவர் என்பது இவர்களுக்கு எப்போது புரியும்?
வசந்த்
வெளிநாட்டில் இருந்து கால் பண்ணும் பையன் ~ அம்மா
ஹலோ…
ம்ம்.. சொல்லு
அம்மா நல்லா இருக்கீங்களா?
அம்மா ~அதான் உன் பொண்டாட்டி சொல்லிருப்பாலே
சாப்பிட்டாச்சா மா என்ன சமையல்?
அம்மா ~அதான் உன் பொண்டாட்டி சொல்லிருப்பாலே
பையன் ~நல்லா இருக்கியானு கேட்டது குத்தமாடா முடியல

வாயாடி
சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளிய வரும் – விஜய்
மத்த நேரம் ஷூட்டிங் போயிரும் அப்படி தான?

Sasikumar J
இடியுடன் மழை பெஞ்சிட்டு இருக்குதுன்னா சீக்கிரமா மழை நிக்க போதுனு அர்த்தம்…!

✒️Writer SJB✒️
என் மூத்த மகன் அமெரிக்காவில் இருக்கிறான்
அவனுக்கு இளையவன் இத்தாலியில் இருக்கிறான்
கடைசி மகன் கத்தாரில் இருக்கிறான்
என பெருமையாக தன் நண்பனிடம் அந்த பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்,
#முதியோர்_இல்லத்தில்.

✒️Writer SJB✒️
ஏன் பாப்பா அழுறீங்க?
அம்மா அடிச்சுட்டா,,
அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தானே?
அப்பா பக்கத்து ரூம்ல அழுதுட்டு இருக்கார்..!

லாக் ஆஃப்