இந்த வருசமும் சுதந்திர தினத்துக்கு நான் தான் ஸ்பீச் கொடுக்கனுமாம். ஆபிஸ்ல சொல்லிட்டாங்க. ஆனா பேசுறதுக்கு தான் ஒரு ஐடியாவும் கெடைக்கல… அதான் டீக்கடைல போய் நம்ம நண்பர்கள் யாருக்கிட்டயாவது ஐடியா கேக்கலாம்னு டீக்கடைக்கு போனேன்.
அங்க நண்பர்கிட்ட இதப்பத்திக் கேட்டேன். உனக்கு பேசுறதுக்கு யாரும் சொல்லி தரவேண்டிய தேவை இல்ல. அதே நேரத்துல நீ அன்னைக்கு என்ன சொன்னாலும் யாரும் உங்கிட்ட திருப்பி கேக்க போறதில்ல…
அதனால வழக்கம்போல எப்படியெல்லாம் வட சுடுவியோ, அப்படியே சுடுனு சொல்லிட்டு போறான். எனக்கு இவன் சொன்ன வார்த்தைக் கூட உறுத்தல…
ஆனா, அவன் சொன்ன கடைசி வார்த்தைய மட்டும் அந்த டீக்கடக்காரர் ஒட்டுக் கேட்டுட்டு, ”தம்பி நீங்க நல்ல வட சுடுவீங்களா… இது தெரியாம அந்த வட மாஸ்டருக்கு சம்பளம் கொடுத்துட்டு இருக்கேன்… நீங்க நாளைக்கே ஜாயின் பண்ணீருங்க”னு சொன்னாரு பாருங்க… ஒரே வெக்கமா போச்சு!
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Michealraj G
என்னப்பா இது காலைல 9.30 மணிக்கு லோன் வேணுமானு கால் பண்றீங்க. வழக்கமா 10 மணிக்கு மேல தானே உங்க கால் லாம் வரும். ரொம்ப சின்சியரா மாறிட்டீங்க போல 😬

Vishnu®
இளம் வயதில் விளையாட்டை கற்றுக் கொள்ளுங்கள்.. இளம் வயதில் பெண்களிடம் நல்லபடியாக பழகு கற்றுக் கொடுங்கள் சரியான விதத்தில். இரண்டும் விட்டால் முடியாது வாழ்நாள் முழுவதும் திரும்ப கிடைக்காது.

vijaychakkaravarthy
எங்க ஊரு போலீஸ் !
“எந்த தெருவா இருந்தாலும் helmet, speed driveனு immediate spot fine போட்டு சட்டத்த காப்பாத்துவாங்க மேடம்…
ஆனா ஆதாரத்தோட கொல கில பண்ணா, அடிச்சு துன்புறுத்துன வீடியோ வந்தா கூட வருஷ கணக்குல time எடுத்து சிலர தப்பிக்க விட்டு நீதிய பறக்க விட்ருவாங்க மேடம்…

▶படிக்காதவன்™✍
எல்லாரும் கூலி படத்தோட ட்ரெய்லர் பத்தி இன்னைக்கு பேசிட்டு இருக்கும்போது
ஒருத்தன் மட்டும் வேலைக்குபோன கூலி பணம் வரலையேனு பொலம்பிட்டு இருந்தான்…
10ஆம் தேதி சம்பளக்காரன்
Sasikumar J
~ பொண்ணு பார்க்க வந்தப்ப ஹஸ்கி வாய்ஸ் ல பேசுன மாதிரி இப்ப ஏன் பேச மாட்டுறீங்க அப்படின்னு கேட்டா நான் என்ன செய்வேன்…!!

balebalu
ஏண்ணே அவனை அடிக்குறீங்க
TCS la கம்பெனிக்காரன் lay off பண்ணுற மாதிரி
வேலை இருந்தும் செய்யாமல் பெஞ்ச் தேய்ச்சுகிட்டு இருக்கும்
நம்மள மாதிரி அரசு ஊழியர்களை lay off செய்வாங்களா ன்னு கேக்குறாம்ப்பா

சரவணன். 𝓜
காதலிக்காக உயிரைக் கொடுப்பது எளிது!
ஆனால் உயிரை ஏற்றுக் கொள்ள கூடிய அளவுக்கு காதலி கிடைப்பது அரிது!
நர்சிம்
கெளரவக் கொலைன்ற சொல்ல ஆணவக் கொலைனு மாத்தியது பத்தாது. ‘மலமூளைக்கொலை, பிறழ்மனக்கொலை,சமூகவிரோதக்கொலை போன்ற கடுஞ்சொற்களும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தண்டனைகளுமே வழி.

✒️Writer SJB✒️
டின்னர் சாப்பிடும் போது தோசை தீஞ்சு போய் இருக்குன்னு சொல்ல தோணுது
ஆனா அதைக் கேட்டு உனக்கு கோபம் வந்து நாளைக்கு டிபன் உப்புமா செஞ்சுடுவியோ என நினைக்கும்போது
அருவியா வந்த கோபம் குருவியா பறந்து போயிடுது..!

வாழமட்டை
படித்தவன் அமைதியாக இருப்பான்… அரைகுறையாக படித்தவன் ஆட்டம் போடுவான்….
புத்தகம் அமைதியாக இருக்கும்…..! அதைப் படித்தவன் ஆட்டம் போடுவான்…..!!
பாட்டில் அமைதியாக இருக்கும்…..! குடித்தவன் ஆட்டம் ஆடுவான்…..!!
பிணம் அமைதியாக கிடக்கும்…..! தூக்கிச் செல்பர்கள் ஆட்டம் போடுவார்கள்…..!!
பணம் அமைதியாக இருக்கும்…..! வைத்திருப்பவன் ஆட்டம் போடுவான்…..!!
இன்னும் வேற…
தாலி கட்டியவன் அமைதியாக இருப்பான்,,,
தாலி கட்டிக் கொண்டவர் ருத்ரதாண்டவம் ஆடுவார்,,,,!
லாக் ஆஃப்