ADVERTISEMENT

’ஏமாந்துட்டேனு நெனைக்காதே.. தப்பிச்சிட்டேனு நெனச்சிக்கோ’ – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க வந்த நண்பர் என்கிட்ட ‘அந்த படத்துக்கு இன்னும் டிக்கெட்டே கிடைக்க மாட்டேங்குது. ஒவ்வொரு நாளும் தியேட்டர் வாசல்ல போய் நிக்கிறது தான் மிச்சன். ஒரே ஏமாற்றமா இருக்கு’னு சொன்னாரு.

அதுக்கு நான், “ஏமாந்துட்டேனு நெனைக்காதே.. தப்பிச்சிட்டேனு நெனச்சிக்கோ’னு சொன்னேன்.

ADVERTISEMENT

’நீ இப்படியெல்லாம் பேச மாட்டியே… எங்க இருந்து இத சுட்ட’னு கேட்டாரு. அதுக்கு நான், ”இதவிட தெளிவா உனக்கு புரிய வைக்க முடியாது.. புரிஞ்சிக்கோ மச்சான்”னு சொல்லி பாத்தேன்.

ஆனா அதை கேக்காம, ’நான் அந்த படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டருக்கு போறேன்’னு கிளம்பிட்டாரு.

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

சாவி

எதுக்காக அவர அடிக்கிறீங்க..?

தமிழ்ல மாங்காய் ஆங்கிலத்தில் Mango னு சொல்றாங்க, அதே போல தமிழில் தேங்காய் ஆங்கிலத்தில் Tango னு சொல்லாம coconut னு ஏன் சொல்றாங்கனு கேட்கிறார் தம்பி..

ADVERTISEMENT

🤔எனக்கொரு டவுட்டு!?

கூலி படத்துல லாஜிக் பார்த்துட்டு இருக்காங்க, டைட்டில் கார்டுல சூப்பர் ஸ்டார் ரஜினினு பார்த்ததும் உங்களோட டீகோட் இன்டெலிஜென்ஸ் லாஜிக் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு படம் பார்க்கணும் மை சன்.. #Coolie

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நானாவது சரத்குமார் மீனா நடிச்ச கூலி படத்தை பாத்துட்டு முந்தா நேத்து ரிலீஸ் ஆன ரஜினியோட கூலி படத்துக்கு ரிவியூ எழுதினேன்..

அங்க ஒருத்தன், அர்ஜூன் நடிச்ச ‘மதராஸி’ படத்தை பாத்துட்டு, அடுத்த மாசம் ரிலீஸ் ஆகப்போற சிகா-வோட மதராஸி படத்துக்கு ரிவியூ எழுதிட்டு இருக்கான்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தீபாவளி நாளில் இந்திய மக்களுக்கு 2 மாபெரும் பரிசுகள் காத்திருக்கின்றன – மோடி.

ஆப்பு வைக்கப்படும் தேதி உறுதி, என்ன ஆப்பு என்பது பின்னர் அறிவிக்கப்படும்!

Mannar & company™🕗

“Saturday night சரக்கு குடிச்சவன் hero வா இருக்கிறான்,
Sunday காலையில் மனைவிகிட்ட zero வாகிறான்!”

Mannar & company™🕗

தரைல காலடி தடத்தை பதிச்சி பூஜை பண்றதும்,
Mop போட்டுகிட்டு இருக்கும்போது தரைல காலடி தடத்தை பார்த்துட்டு திட்றதும் ஒரே ஆளா..!?

#கிருஷ்ணஜெயந்தி

✒️Writer SJB✒️

தேசத்தை விற்பவர் நாட்டை ஆள்கிறார்
தேசியக் கொடியை விற்பவன் பட்டினி கிடக்கிறான்🤦

jaaki

என் ஃப்ரெண்ட் குடிச்சதும், ‘நான் திடீர்னு செத்துட்டா என் ரெண்டு கிட்னியும் கிட்னி ஃபெயிலியர் நோயாளிகளுக்கு தனமா கொடுத்துடுடா‘னு என்கிட்ட அடிக்கடி சொல்வான் அதே மாதிரி பண்ணிடுங்க டாக்டர்

டாக்டர் : அவர் செத்துப்போனதே ரெண்டு கிட்னியும் பெய்லியர் ஆனதால் தான்டா!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share