இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஆளுநர் தேநீர் விருந்துக்கு முதல்வர் ஸ்டாலின், விஜய், திருமா, வைகோ இப்படி பல பேர் போகலனு செய்தி ஓடிட்டு இருந்துச்சி…
அதக் கேட்டுக்கிட்டு இருந்த நண்பர், ”என்னப்பா நடக்குது நாட்டுல, இங்க நாங்க டீக்குடிக்க காசு இல்லாம அக்கவுண்ட் வச்சி டீக்குடிச்சிட்டு இருக்கோம். ஆனா அங்க ஆளுநர் வெத்தலப்பாக்கு வச்சி கூப்பிடுறாரு… யாரும் போக மாட்டேங்குறாங்க.. சரி, நாளைக்கு எனக்கு லீவு தான்… ஒரு எட்டு எடுத்து வச்சி அந்த தேநீர் விருந்துக்கு போய்ட்டு வந்துறேன்”னு சொன்னாரு
”நாமெல்லாம் கவர்னர் மாளிகை வாசல் பக்கம் சும்மா நடந்து போனாலே… அங்குள்ள போலீஸ் முறைச்சி பாப்பாங்க.. ரைட்டு நண்பர கடைசியாக ஒரு தடவை பாத்துக்கிடுவோம்’னு மனசுக்குள்ள நெனச்சிடு அவர நல்லா உத்து பாத்துட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நானாவது பரவால்ல, வாட்சப் ஸ்டேட்டஸ்ல வந்த சீன்ஸை வைச்சு ரிவியூ எழுதிட்டு இருக்கேன், அங்க ஒருத்தன் சரத்குமார் மீனா நடிச்ச ‘கூலி’ படத்தை பாத்துட்டு ரஜினியோட கூலி படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு இருக்கான்..

Mannar & company™🕗
அதிமுகவில் இருந்து விலக உள்ளதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுப்பு!
அப்படின்னா அதிமுகவிலேயே “தங்கும் மணி”ன்னு அடிச்சி சொல்லுங்க!

Mannar & company™🕗
இப்போலாம்,
அடுத்த வேளை சோத்துக்கு வழி தேடுறவங்கள விட,
அடுத்த மாச EMIக்கு வழி தேடுறவங்க தான் அதிகம்.

Mannar & company™🕗
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
பின்னே என்னப்பா..
கூலி வாங்கிக்கிட்டு
கூலி படத்துக்கு விமர்சனங்கள் பண்றவங்களையெல்லாம்
கூலிக்கு மாரடிக்கிறவங்கதானேன்னு கேட்குறான்பா!

Sasikumar J
ஆபீஸ்க்கு தான் வரல என்ன ஸ்டேட்டஸ் அப்படின்னு கேட்டதுக்கு
இருங்க இன்டர்வல் வரட்டும் வாட்ஸ் அப்ல அனுப்பி வைக்கிறேனு சொல்றான்.

Semaka789
குரைக்கிற நாய் கடிக்காதாம்,
நாலு நாய் குரைக்கும்போது நடந்துபோய் பாரு,
பாதி உசுரே போயிரும்யா. 🦮🐕

BINDU-ബിന്ദു.
கார்ல பிள்ளைகள school, டியூஷன் கொண்டு போய் விடுற ஆட்களும், apartment விட்டு வெளியே வராம walking போற elite வர்க்கமும் நாய் பாவம்னு பேசத் தகுதி இல்லாத ஆட்கள்.
நடந்து போய் கடி வாங்கி பாருங்க, atleast அது விரட்டும் போது ஒரு 100 மீட்டர் அலறிட்டு ஓடி பாத்துட்டு அப்புறம் பாவப்படுங்க

✒️Writer SJB✒️
ஒருவன் கடவுளிடம் என் கடந்த கால நினைவுகளை எல்லாம் அழித்து விடுங்கள் என்றான்
சரி அழித்துவிட்டேன் என்றார் கடவுள்
உடனே அவன் என் மனைவியின் பெயர் எனக்கு ஞாபகம் இருக்கிறதே என்றான்
உடனே கடவுள் என்னால் உன் மெமரீசை தான் அழிக்க முடியும் வைரஸை அழிக்க முடியாது என்றார்.

லாக் ஆஃப்