சகுனி பட இன்ஸ்பிரேசனா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த டிவில இன்னைக்கு முதல்வர் தொடங்கி வச்ச வீடு தேடி ரேசன் பொருட்கள் திட்டம் பத்தி ஒரு பொண்ணு நியூஸ் வாசிச்சிட்டு இருந்துச்சி.

’எவ்ளோ நல்ல திட்டம்ல’னு எல்லோரும் பாத்துட்டு இருந்தாங்க. திடீர்னு டீக்கடைக்காரர் கேடிவி மாத்திட்டாரு. அதுல சகுனி படம் ஓடிட்டு இருந்துச்சி.

ADVERTISEMENT

அப்போ ஒரு சீன்ல, எலக்சன்ல நிக்குற ரவுடி ராதிகாவுக்கு கார்த்தி ஒரு ஐடியா கொடுக்குறாப்புல… அதாவது கூட இருக்குற அவரோட ஆட்களை வச்சி, ஓட்டு போடுற மக்களோட வீடு தேடி போயி தண்ணி புடிச்சி கொடுக்குறது, ரேசன் பொருட்கள் வாங்கி கொடுக்குறதுனு செய்ய சொல்லுற மாறி அந்த சீன் இருந்துச்சி..

அத பாத்துட்டு பக்கத்துல இருந்த பெரியவரு சிரிச்சிக்கிட்டே, தேர்தல் நெருங்க நெருங்க இது மாதிரி இன்னும் நெறைய நடக்கும்னு சொல்லிட்டு போறாரு…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஒவ்வொரு ஷாப்பிங் மால்ஸ் பார்க்கிங்லயும் பத்து பதினஞ்சு தெருநாய்களை நடமாட விட்டா, அப்புறம் ஆதரவா பேசற எலீட்ஸ் எல்லாம் வாயை மூடிக்குவாங்க

Mannar & company™🕗

மனைவி ஊரில் இல்லைன்னா

ADVERTISEMENT

வீட்டில் கரப்பான்பூச்சி, கணவன் என இரண்டு ஜீவன்களுக்கு சுதந்திரம் கிடைத்து விடுகிறது!!

மதுவந்தி

விசேஷ. நாட்களில் ஆயிரம் ரூபாய் செலுத்தி

சிறப்பு தரிசனத்திலும் காண இயலாத போது தான்,

அவர் சக்தி வாய்ந்த கடவுளாகிறார்

Mannar & company™🕗

“கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு திருமண நிச்சயதார்த்தம்!

இனி அவர் மனைவி உதைப்பதையும் பார்க்கலாம்.!”

Techie

‘மக்களை தேடி செல்’ – அண்ணா

“மக்களை பனையூருக்கு அழைத்து வா” – விசயண்ணா

✒️Writer SJB✒️

வறுமைக்கு கடன் வாங்கிய காலம் போய்

வசதியாய் வாழ கடன் வாங்கும் காலத்தில் வாழ்கிறோம்🤦

இனியன்

ஒரு தெரு நாய் கூட இல்லை எனும் நிலைமையை உருவாக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட் அதிரடி

திருடர்கள் மைண்ட் வாய்ஸ்:- இனிமேல் நிம்மதியா திருட போகலாம்..!

Habitual offender

தன்னோட சர்விஸ் முழுக்க லஞ்சத்துல திளைச்சு அரசாங்கத்தோட எல்லா மானியத்தையும் அனுபவிச்சு தன் பிள்ளைகளை வெளிநாட்டுல செட்டில் பண்ணி ரிட்டயர்ட் ஆனா ஒரு ஏ கிரேட் ஆபிசர்ட உங்க பென்சன் எவ்வளவுனு கேட்டா 82000னு சொல்லுவாங்க. ஆனா இந்த துப்புறவு பணியாளர்கள் சம்பளத்தை ஏற்கனவே குடுத்துட்டு இருந்ததுல இருந்து 5000ருபா குறைச்சு குடுத்துட்டு அதையும் பேச்சுவார்த்தைனு இழுத்தடிச்சுட்டு இருக்காங்க.

தான் பெறாத பிள்ளைக்கு யாராவது தாய்பால் குடுத்தா இது தான் தாய்மையின் மேண்மைனு பயர் விடுவாங்க. தான் பெறாத பிள்ளையோட சீய் அள்ளி போட யாருமே தயாரா இருக்க மாட்டாங்க, ஒருசிலர் தவிர்க்கமுடியாத சூழல்ல செய்வாங்க.ஆனா ஒரு தெருவுல 50 டஸ்பின் வெளிய வைச்சா அதுல 30ல டைபர் இருக்கும். அதுவும் முறையா பேக் பண்ணி வைச்சிருக்க மாட்டாங்க. பேஸ்கட் பால் மேட்ச்ல கோல் போடுற மாதிரி வீட்ல எதாவது ஒரு மூலைல இருந்து டஸ்பின்ன நோக்கி எறிஞ்சுருப்பாங்க. இவங்க ஆதையும் வெரும் கையால எடுத்து பிரிச்சு போட்டு எடுத்துட்டு போகனும் .இந்த வேலைக்கு நடுல டீ வடை சாப்பிட்டு லஞ்ச் சாப்ட்டு இதே வேலைய கண்டிநியூ வேற பண்ணணும்.

25000 பேசிக் பே இருக்க குருப்4க்கு பலவருசம் மாங்கு மாங்குனு படிப்பாங்க,ஆனா யாரும் 50000குடுத்தாலும் இந்த வேலைய செய்ய முன்வரமாட்டாங்க. இவங்க இந்த வேலைய தேர்ந்தெடுக்கலை,இந்த வேலை தான் இவங்களை தேர்ந்தெடுத்துருக்கு.

துப்புறவு வேலைக்கு வர்ற பெண்களோட பயோடேட்டாலாம் ஒரே மாதிரி தான் இருக்கும். ஒன்னு டாஸ்மார்க்ல புருசனை தொலைச்சுருப்பாங்க இல்லனா தொலைச்சுட்டு இருப்பாங்க. வேற எந்த பொருளாதார சப்போர்ட்டும் இல்லாது மாசம் பிறந்தா அக்கவுண்ட்ல ஏறுற நிலையான சம்பளத்தை மனசுல வைச்சுட்டு தான் இந்த வேலைய ஏத்துக்குறாங்க.காண்டிராக்ட் ஒரு லேபருக்கு இவ்வளவுனு முன்னமே அரசாங்கத்துட்ட வாங்கி அதுல இருந்து தலைக்கு 5000பிடிச்சுட்டு சம்பளமா தருவாங்க. அரசு அந்தவேலைக்காக செலவிட நினைக்குற தொகையை விட குறைவா தான் வேலை பாக்குறவங்களுக்கு போய் சேறும். இதுவே அபத்தம் தான்.

பெண் உரிமை,விடுதலை,முன்னேற்றம் இது எல்லாத்துக்கும் இந்த வேலைய அரசே ஏற்று நடத்துனாலே போதும்.மோனோபோலியா வேற எந்த துறைல இருந்தாலும் பணம் கோடில கொட்டும்,நல்ல மரியாதை கிடைக்கும்,பலநூற்றாண்டா துப்புறவு பணியாளர்களா குறிப்பிட்ட ஆட்கள் மட்டும் தான் மோனோபோலியா இருக்காங்க, ஆனா அவங்களுக்கு அதுக்கான ஊதியமோ,மரியாதையோ என்னைக்குமே கிடைச்சது இல்ல.

அவங்களோட நியாயமான கோரிக்கைய ஏற்று தினமும் சந்தோசமா மனநிறைவோட வேலைக்கு கிளம்பி வர்ற மாதிரியான ஊதியத்தை கொடுக்க வேண்டியது அரசோட கடமை…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share