இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க சென்னைல போராடிட்டு இருக்குற தூய்மை பணியாளர்களை பனையூர்ல சந்திச்சி, அவங்க போராட்டத்துக்கு விஜய் ஆதரவு தெரிவிச்சத பத்தி பேசிட்டு இருந்தாங்க.
அப்போ நண்பர் ஒருத்தர், ”விஜய் ஒருவேள முதலமைச்சர் ஆயிட்டாருனா. தலைமை செயலகத்துகாச்சும் வருவாரா இல்ல, த.செயலகத்தை பனையூருக்கு கூப்பிடுவாரா”னு கேட்டாரு…
என்னடா இப்படி கேட்டாரேனு பாத்தா, அங்க இருந்த பெரியவரு, “தம்பி நீ கல்யாணம் முடிக்கிற வர, வீட்டுல சொல்ற ஒரு வேலையும் செஞ்சிருக்க மாட்ட, ஆனா கல்யாணம் ஆனப்பிறகு.. வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குறதுல இருந்து எல்ல வேலையும் விழுந்து விழுந்து செய்யுறல… அதுமாதிரி அவரும் முதல்வரானா தலைமை செயலகத்து வருவாரு”னு சொன்னாரு.
அதை கேட்டு, பேசாம சும்மாவே இருந்துருக்கலாம்னு நண்பர் அமைதியா ஆயிட்டாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கோவிந்தராஜ்
She : டேய் Free’ஆ இருந்தா கால் பண்ணு.. பாத்திரம் தேய்க்க போறேன்..
He : நீங்க பாத்திரம் தேய்க்கும் போது மட்டும் யூஸ் பண்றதுக்கு நான் என்ன Vim Bar’ஆ மேடம்!! 😌😌😌😌😌

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெருநாய்கள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம்
விலங்கு நல ஆர்வலர்கள் ~ அப்படின்னா, எல்லாரும் வீட்டை காலி பண்ணிட்டு கடலுக்குள்ள போயி குடியிருங்க..

வார்னர்
தம்பி.. பர்சனல் விஷயம்ன்னு எதையும் நீங்க யார் கிட்டயும் ஷேர் பண்ணி நான் பார்த்ததே இல்லை, உங்களுக்குன்னு ஒரு கவலை ஒரு கடந்த கால சோகம்னு எதுவுமேவா இல்லை..?
அதெல்லாம் நிறைய இருக்கு சார்.. ஆனா சொன்னா, எவனும் hair ah கூட மதிக்க மாட்டான், அதான் எதையும் சொல்றதே இல்லை..

ச ப் பா ணி
கூலி பட பங்சன்ல ரஜினியோட பேச்சு சூப்பரா இருந்துச்சு. நீ ஏப்ப வருத்தமா இருக்க?
அடுத்த ஆடியோ ரிலீஸ் ல தனுஷ் இப்படி பேசுவார்னு நினைச்சா தான்

செங்காந்தள்
ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள் வருவதால் தான் திங்கட்கிழமைக்கு இந்த அவப்பெயர்.
திங்கட்கிழமைக்கு முதல் நாள் வருவதால் தான் ஞாயிற்றுக்கிழமைக்கு இந்த நல்ல பெயர்…!!!

balebalu
மாடர்ன் கல்யாணம் ன்னு சொன்னாங்களே
வரதட்சணை இல்லாம சிம்பிளா பண்ணாங்களா
அதான் இல்ல
” ரோபோ ” வெச்சு மொய் எழுத வெச்சாங்க

லாவண்யா
பூஜ்யத்திற்கும் மதிப்பு (ஓட்டு) உண்டு
யாரு சொன்னா…
தேர்தல் ஆணையம் தான்..
வீட்டு நம்பர் கூட இப்போலாம் 0னு போடுறாங்க..

mohanram.ko
இந்த 30 வருச வாழ்க்கையில என்ன கத்துக்கிட்ட..
மீ ~
ஹேர்ஸ்டைல் மெயின்டெய்ன் பண்றது ஈஸி.
ஹேரை மெயின்டெய்ன் பண்றது தான் கஷ்டம்
லாக் ஆஃப்