ஒரே ஒரு கேள்வி தான் – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls august 10

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க விஜய்யோட டிவிகே கட்சிக்காரர் ஒருத்தரு… கூட இருந்த தன்னோட நண்பர்கள் கிட்ட, “2026 சட்டமன்ற தேர்தல்ல விஜய் தான். அவரு போன எல்லா இடத்திலயும் செம கூட்டம். நிக்க கூட இல்ல”னு அப்படி இப்படினு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரு.

அங்க இருந்தவங்கல ஒருத்தன் மட்டும் உஷாரு போல, ”விஜய் போன இடம் எல்லாம் கூட்டம்னு சொன்னீயே… அப்படி அவரு எங்கெல்லாம் போனாரு?”னு ஒரே ஒரு கேள்வி கேட்டான்.

ADVERTISEMENT

அவ்ளோ அந்த டிவிகே காரர் மூஞ்சி புஷ்ஷுனு ஆயிடுச்சி.. பிறகு விஜய் எங்கயாச்சும் போனா தானே ஏதாச்சும் சொல்ல முடியும்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

மணிகண்டன்

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமைன்னா எந்த வேலையும் இல்லாமல் ஜாலியா தூங்கி ரெஸ்ட் எடுப்பாங்கன்னு எல்லோரும் நினைச்சிக்கிட்டு இருக்காங்க,

ஆனா, காலையிலேயே எழுந்திரிச்சி பால் பாக்கெட் வாங்கி கொடுத்து டீ குடிச்சிட்டு கறிக்கடை, உழவர் சந்தைன்னு போயிட்டு வர்றது யாருக்கும் தெரியறதில்லை!!

ADVERTISEMENT

பாகன்

ஊரு சனம் தூங்கிருச்சு

ஊதக் காத்தும் அடிச்சிருச்சு

பாவி மனம் தூங்கலையே!

அதுவும் ஏனோ புரியல்லையே!

கடன் வாங்கினாலும், கொடுத்தாலும் அப்படித்தான் ஆகும்…!!!

லாவண்யா

அரசியல் பேச்சு வார்த்தைகள் கூட வெற்றி பெற்றுவிடும்,

இந்த இல்லற பேச்சுவார்த்தை எப்போதுமே தோல்வி தான்…!

Mannar & company™🕗

கறிக்கடைகாரர்கள் நண்பராய் இருந்தால் நமக்கு எல்லாமே “luck” பீஸ்தான்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

‘ரக்‌ஷபந்தன் ஸ்பெசல்’ன்னு பார்லே-ஜி பிஸ்கட்க்கு தள்ளுபடி போட்டுருக்கான்.

என்னதான் அடுத்த வாரம் எக்ஸ்பயரி ஆக போற பொருளை தள்ளிவிட பிளான் போட்டாலும், ஒரு லாஜிக் வேணாமாடா..?

ஜாக்கி

போன வாரம் ஞாயித்துகிழமை ஆடி 18 ஒருநாள் கறி சாப்பிட கூடாதுன்னதுக்கே இடிஞ்சு போயி உட்காந்தீங்களே, இன்னும் ஒரு மாசத்துல புரட்டாசி வரப்போகுது தெரியுமா?

Sasikumar J

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அப்படின்னு ஆரம்பிச்சு, உங்க கிட்ட பேசினது என் தப்பு தான் அப்படின்னு சொல்லி முடிந்ததுனா அது தான் இல்லற பேச்சு வார்த்தை…!

யூசுப்


கால் கிலோ கறி கொடுங்கன்னு கேட்டா அதை முக்கால் கிலோ வா அப்படின்னு கேட்கும் கறிக்கடைக்காரருக்கு தான் தெரியும் நம்மளுடைய வீக்னஸ்…!

𝙼𝚛.𝙹𝚘

-போன வருசத்த விட இந்த வருசம் ரொம்ப அதிகம் ஆகிடுச்சு…

  • ஜனத்தொகையா மாப்ள

-அட வெள்ளை முடி மாமா 🤭…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share