என்ன பெரிய பார்க்கிங் பட ஈகோ… அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls august 1

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த நண்பரு… ”இந்த பார்க்கிங் படம் 3 தேசிய விருதுகளை வாங்கிருக்கு. அந்த படத்துல காட்டுன ஈகோ சீன்ஸ் மாதிரி நா வேற எங்கேயுமே பாத்தது இல்ல’னு சொல்லிட்டு இருந்தாரு.

அதக்கேட்டு அங்க இருந்த பெரியவரு… ”என்ன பெரிய பார்க்கிங் பட ஈகோ… அதவிட பெரிய ஈகோ அந்த கட்சிக்குள்ள ஓடிட்டு இருக்கு… அப்பா ஒருத்தர கட்சிய விட்டு நீக்குனாருனா… அவரை பையன் கட்சில சேத்துக்குடாதுரு….

அப்பா ஒரு தேதில பொதுக்குழு அறிவிச்சாருனா… மகன் இன்னொரு தேதில பொதுக்குழு கூட்டத்த அறிவிக்குறாரு… எனக்கு தெரிஞ்சி இப்படி ஒரு ஈகோ கா(க)ட்சியை நா வேற எங்கேயும் பார்க்கல”னு சொன்னாரு பாருங்க… ஒருத்தரு கூட மறுவார்த்தை பேசல.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

▶படிக்காதவன்™✍

அடிக்கிற கைதான் அணைக்கும்’னு சொல்ற மாதிரிதான்
மீட்டிங்னு கூப்பிட்டு மிக்சர் முறுக்கு டீ’லாம் கொடுத்து பிறகு திட்றதும்…

செங்காந்தள்

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்” – ட்ரம்ப்

ADVERTISEMENT

ஒருவேள எங்ககிட்ட சர்வரோக நிவாரணி கோமியம் இருக்குனு சொல்லிருவாய்ங்களோ…

Mannar & company™🕗

ஆண்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பெண்கள் வரலட்சுமி விரதம் நோன்பு இருந்து சுமங்கலி பூஜை செய்வாங்க.

அப்ப ஆண்கள்?!

அது “வர்ற லட்சுமி”யை பொருத்து!


✒️Writer SJB✒️

ஆண்ட பரம்பரை:- கவின் எத்தன பொண்ணுங்க கூட செல்ஃபி எடுத்து இருக்கான் பாத்தியா ?

மீ;- நீ காலேஜ் போய் போயிருக்கியா இல்லையா?

ஆ.ப:- காலேஜா ?அப்படின்னா??

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஒரே பெண்ணுக்கு 43 முறை Propose செய்த நபர்!

வெட்கப்பட்டேன் வேதனைப்பட்டேன் துக்கப்பட்டேன் துயரப்பட்டேன்..

இவ்வளவு பட்டும் திருந்தலயே மாமா நீ..

vijaychakkaravarthy

“சாமி… இன்னைக்கு ஆடி வெள்ளி விரதம் இருந்து எல்லோரையும்்கூப்பிட்டு பூஜ பண்ணா என் புருஷன் நல்லா இருப்பாரா…”,

“நீ வாரத்துல ஏழு நாள் மௌண விரதம் இருந்தாலே போதும்…அவன் சந்தோஷமா இருப்பான்…”

Mannar & company™🕗

கேரளாவில் பள்ளிக்கான ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்- மே மாதத்திலிருந்து, மழைக்காலமான ஜூன்- ஜூலைக்கு மாற்ற அரசு திட்டம்
ஜூலை மாதத்தில் கனமழை பெய்து விடுமுறை விட வேண்டி உள்ளதால் அரசு திட்டம்!

மை சன் – அப்ப நமக்கும் டிசம்பர்ல லீவு விடுவாங்களாப்பா?

ச ப் பா ணி

உங்களுக்கு நான் முக்கியமா?
உங்க அம்மா முக்கியமா?
ஆண்கள் எதிர்கொள்ளும் யார்க்கர் பந்து ..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share