இது தான்யா தேச பக்தி – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்தரு… ‘பாகிஸ்தானுக்கும், நமக்கும் போர் வர்ற மாதிரி இருக்கு… இந்த நேரத்துல இந்த ஐபிஎல்னா தேவையா?’னு கேட்டாப்ல…

அத கேட்டதும், ‘என்ன நண்பா, உனக்கு அவ்வளவு தேச பக்தியா? இவ்வளவு நாள் பாத்ததே இல்லையே’னு கேட்டேன்.

அதுக்கு அவரு, “அட நீ வேற, நான் CSK ரசிகன். எப்படியும் இந்த தடவ அது கப் வாங்க போறதில்ல
இனிமே மேட்ச் நடந்தா என்ன? நடக்காட்டி என்ன? அதான் ஒரேடியா முடிஞ்சா நல்லாருக்குமேனு நெனைக்குறேன்”னு சொன்னாரு பாருங்க…

அடப்பாவி, கொஞ்ச நேரத்துல உன்ன என்னமோ நெனச்சிட்டேனு மனுசுல நொந்துட்டு கிளம்பிட்டேன். update kumaru memes and trolls april 28

நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. update kumaru memes and trolls april 28

ஜெகதீஷ்.கோ

செந்தில்பாலாஜி க்கு கூடுதல் நிபந்தனைகள் விதிக்க வேண்டும் ~ அமலாக்கத்துறை

என்ன #பாஜக வுல சேர சொல்லி நிபந்தனை விதிக்க சொல்வானுங்களோ?

✒️Writer SJB✒️

காஷ்மீரில் பாகிஸ்தான் காரன் இந்தியர்களை சுட்டுக் கொன்றால் கன்னியாகுமரி வரை மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்

தமிழ்நாட்டு கடற்கரையில் இலங்கை ராணுவம் தமிழ் மீனவனை சுட்டுக் கொன்றால் தமிழ்நாடு தாண்டி யாரும் கண்ணீர் வடிப்பதில்லை..!

சரவணன். 𝓜

Orange Cap – RCB
Purple Cap – RCB
Table Topper – RCB

இன்னும் வேற எதுனா மிச்சம் இருக்கா பா?

மீ ~ தம்பி ரொம்ப பொங்காத… champion cup இருக்கா?


iQKUBAL
·
ஆபீஸ் போறோம்.. ஒழுங்கா வேலை பாத்து கோடி கோடியா சம்பாதிக்கிறோம்..

Reality : ச்சை… இந்த திங்கள் கிழமை வேற குறுக்க வருதே.. 😂😂😂

வளர்மதி

மருமகன் :~ உங்க பொண்ணு என்னைய ரொம்ப டார்ச்சர் பண்றா மாமா.. 🥲🥲

மாமனார் :~ உனக்கு கட்டி குடுத்தாச்சுல.. எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. 🔥🔥

ஜோதிகா

நேத்து உழவர்சந்தை வாசல்ல Ex-Lover இளநீர் கடை போட்டத பாத்ததும் மனசு கஷ்டமாகிடுச்சு.. என்னைய கட்டிருந்தா சந்தோசமா இருந்திருப்பா.. 🥹

நீ எதுக்கு அங்க போன?

Me :~ நான் அங்க தான தர்பூசணி வெட்டிட்டு இருக்கேன்..

✒️Writer SJB✒️

ஜாதியும் பிளாஸ்டிக்கும் ஒன்னு

அழிக்க முடியாது ஆனா பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.

Vasu Devan

இஸ்லாமிய இலக்கியம் என தனியாக பிரிக்க வேண்டாம் என நினைக்கிறேன். அது இன்னும் இஸ்லாமியர்களை விளிம்பிற்கு தள்ளும் என்ற தயக்கம் எனக்கு உண்டு. இஸ்லாமிய தமிழ் என்பது வேறு. அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அலங்காரத்தில் முருகனை ராவுத்தனே என அழைக்கிறார்.

“தனிமயில் ஏறும் ராவுத்தனே” என ஒரு பாடலை முடிக்கிறார். ராவுத்தர் என்ற அரேபிய சொல்லுக்கு குதிரை வீரன் என்ற பொருளுண்டு. முருகனின் வீரத்தையும், கம்பீரத்தையும் விவரிக்கும் பொருட்டு ராவுத்தர் என்ற சொல்லை அவர் பயின்றுள்ளார். தேவாரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் “பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!”…..எனத் தொடங்கும் பாடலில் ”அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே” எனப் பாடுகிறார். ‘அத்தா’ துருக்கிய சொல். ‘தந்தை/தலைவன்’ எனப்பொருள் உண்டு. அதாவது “நான் உனக்கு அடிமையாக இனி இருக்க மாட்டேன், அப்படி இருக்கலாமா?”. எனக் கேட்கிறார்.

நவீன இலக்கியங்களில் இஸ்லாமியர்களை மிக கண்ணியமாக சித்தரித்த எழுத்தாளர்கள் உண்டு. இப்போது நிலைமை வேறு. இஸ்லாமியர்கள் பற்றி இஸ்லாமியர்கள்தான் எழுதவேண்டும் என்ற அவல நிலை உருவாகியுள்ளது. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆனல் தி.ஜானகிராமன் தனித்துவமானவர்.கும்பகோணம், காவிரிக்கரை, அக்ரஹாரம், வெற்றிலைப்பாக்கு, கர்நாடக சங்கீதம், ஃபில்டர் காஃபி இதெல்லாம் அவருடைய கதைகளில் தவறாமல் இடம்பெற்றாலும், அதை விவரிக்கும் விதம் அலாதி. ஆனால் இதைவிட என்னை பிரமிக்கவைத்த விஷயம அவர் இஸ்லாமியர்களை சித்தரித்த விதம்.

மோகமுள், அம்மா வந்தாள் அவருடைய மிகச்சிறந்த படைப்புகள். ஆனால் அவருடைய ‘உயிர்த்தேன்’ பரவலாக கவனம் பெறவில்லை. நான் இந்த நாவலை வாசித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நாவலின் மையக்கருவும் நினைவில் இல்லை. நேற்று ஒரு நண்பரிடம் பேசியபோது ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினார். ஆனால் ஒரு கதாபாத்திரம் இன்னும் நினைவில் இருக்கிறது. நாவலின் முதல் அத்தியாயத்தில் வயதுமுதிர்ந்த இஸ்லாமியர் அக்ரஹாரத்தில் வேதப் பாடலை பாடியபடி வெற்றிலை விற்றுக்கொண்டு வருவார்.அவரிடம் வெற்றிலை வாங்கும் பிராமணர்களோடு வேதாந்தத்தையும் உரையாடுவார். வெற்றிலையோடு அவருடைய வேதாந்த உபந்யாசத்தையும் கேட்க அக்ரஹார பிராமணர்களுக்கு விருப்பம் அதிகம். உப்பிலி என்ற பிராமண இளைஞன் அவரோடு உரையாடுவான்.

இந்த முதல் அத்தியாயம் முழுவதும் அந்த முதிய இஸ்லாமியரைப் பற்றி மிக அழகாக தி.ஜா விவரித்தது நினைவில் உள்ளது. விஷயம் இதுவல்ல. ஆனால் இந்த இஸ்லாமிய முதியவர் கதாபாத்திரம் அதற்குப்பிறகு நாவலில் பார்க்கமுடியாது. இது எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. இது ஏன் அவர் எழுத வேண்டும்? அந்த நாவலில் இஸ்லாமிய கதாபாத்திரம் எந்தவிதத்திலும் முக்கியப்பங்கு வகிக்கவில்லை. முதல் அத்தியாயத்தில் அந்த கதாபாத்திரத்தையும் தவிர்த்திருந்தாலும் கதை ஓட்டத்தில் எந்த மாறுதலும் வரப்போவதில்லை. ஆனால் அந்த இஸ்லாமியர் முதியவரை ஏன் தி.ஜா முதல் அத்தியாயத்தில் கண்ணியமாகவும் அழகாகவும் விவரிக்க வேண்டும்? தி.ஜா போன்ற மேதைகளின் படைப்புகள் காலம் கடந்து நிற்பதற்கு உயிர்த்தேன் நாவலே சாட்சி.

தி.ஜாவின் கதாபாத்திரங்கள் தனித்துவமாக இருப்பதற்குக் காரணம் அத்தகைய தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் மனித சுதந்திரத்திற்கான மீட்சியை முன்வைக்கிறார். தற்காலத்தில் ஒற்றை அர்த்த ஒழுங்கமைப்பினை முன்வைத்து இஸ்லாமியர்கள் விளிம்பிற்கு தள்ளப்படும்போது, தி.ஜாவின் பெயரில்லாத முதிய இஸ்லாமிய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உறைய‌ வைக்கிறது. மேதை!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share