இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க பாட்டாளி தோழர் பால் குடிச்சிட்டு இருந்தத பாத்ததும், பேசனும்னு தோனுச்சி.
அவருகிட்ட போயி, “தோழரே, நம்மளுக்கு இது போதாத காலம் போல. உங்க தலைவர், மகன் கிட்ட இருந்த பதவிய பறிச்சி தன்னையே தலைவரா அறிவிச்சாரு. இப்போ என்.டி.ஏ கூட்டணில இருக்காங்களானு தெரியல.
அதே மாதிரி, சிஎஸ்கே டீம் கேப்டன் பதவிய ருத்துராஜ் கிட்ட இருந்து வாங்கி, தோனிகிட்ட கொடுத்தாங்க… இன்னைக்கு 100 அடிக்கவே அள்ளு போயிருச்சி.. இப்படி பாத்தா சிஎஸ்கேவும் பிஎம்கேவும் ஒண்ணுதானே?னு கேட்டேன்.
தோழர் டீய அப்படியே வச்சிட்டு பேசாம கெளம்பிட்டாரு… update kumaru memes and trolls april 11
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 11

mohanram.ko
அண்ணாமலையின் நிர்வாகத்திறன் தேசியக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் – அமித் ஷா
அப்ப ஆளுநர் தான்…. இல்லை மத்திய மந்திரி தான்… , இல்லை… ஜி பேசறதை பார்த்தா தேசிய தலைவர் தான்.. ஏன் பிரதமரே ஆகலாம் போலேயே ~ அண்ணா மலை

கோவிந்தராஜ்
ஏன்பா கடவுளே எனக்கு ஏன் இவ்ளோ பிரச்சனைய கொடுக்குற…என்னால முடியல..!!!!
காட் ~அங்க ஒரு சூப்பர் பொண்ணு போகுது பாரு….
ஆங்..இந்தா பாக்குறேன்….நல்ல கடவுள் தான்
காட் ~ நீயில்லாம் திருந்தவே மாட்ட…

mohanram.ko
ஜி. கே. வாசன் –
கட்சியில ஆளுங்க இருந்தா தான் பிரச்சனை.
எங்க கட்சியில தலைவர மாத்தனும்னு யாரும் பேச மாட்டாங்க….

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் இருந்து விலகிய அண்ணாமலை
அப்படின்னா இனிமே வாழ்க்கைல செருப்பு போடவே முடியாதா..?
mohanram.ko
ராமதாஸ் டூ எஸ்ஏசி – பையன் கிட்ட இருந்து தலைவர் பதவியை எடுத்துக்கோ
எஸ்ஏசி ~ யாருண்ணே நீ
ராமதாஸ் ~ நானும் உன்னை மாதிரி அப்பா தான்ப்பா

Sen Balan
அண்ணாமலை ~ அப்புறம் ஜீ… ஆளுநர் பதவியா? அமைச்சர் பதவியா?
ஜி ~ எதெ?
அண்ணாமலை ~ மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்குன பிறகு கொடுப்பீங்களே அதான் ஜி..

Balamurugan
செங்கோல் பத்தியும், காசி தமிழ் சங்கமத்தையும் நடத்துனதையும் பெருமையா பேசுறாரு😂😂😂
இங்க மக்கள் அதை கிண்டல் பண்ணினதை யாரும் அவருக்கு சொல்லல போல…. பாவம்😂😂

Joe…😎😎
சரத்குமார் to தமிழிசை ~
நானாச்சும் பரவால்ல, அடுத்த கட்சி, நேரம் சரியில்லை. கட்சியை கலைச்சிட்டு வந்துட்டேன்..
ஆனா நீ, கவர்னர் பதவியையும் ராஜினாமா பண்ணிட்டே.. 10 வருஷமா உறுப்பினர் கணக்கிலயும் வர மாட்டே.. மாநிலத்தலைவராவும் ஆக முடியாது.. ரொம்ப பாவம்க்கா நீ..

லாக் ஆஃப்
