மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.சீருடையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம், 1925-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் 100-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, சிறப்பு தபால் தலை மற்றும் ரூ100 நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் பங்கேற்று அந்த இயக்கத்தின் உறுதிமொழிகளை ஏற்றனர்.