சர்வதேச விமான நிலையமான மதுரை- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On:

| By Mathi

Madurai Airport

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உலக நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். பெருமைமிக்க மதுரையின் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறுகையில், எங்களின் இடைவிடாத போராட்டம் வெற்றி பெற்றது.
மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான கொள்கை முடிவு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தென் தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் இம்முடிவுக்காக நீண்ட காலம், இடைவிடாது போராடி வந்தோம். எங்களின் போராட்டம் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

இனி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்கானப் பணிகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share