முதல் முறையாக பணிக்கு செல்வோருக்கு ரூ15,000 வழங்கும் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On:

| By Minnambalam Desk

Union Cabinet

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு – Employment Linked Incentive (ELI) Scheme ஒப்புதல் அளித்துள்ளது. Union Cabinet PM Modi

உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதை ஆதரிப்பதற்கும், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்குமானதுதான் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்.

இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணி அமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் (ரூ.15,000/- வரை) கிடைக்கும்.

அதே நேரத்தில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். உற்பத்தித் துறைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும்.

4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் பிரதமரின் ஐந்து திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக 2024-25 மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இதன் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share