இரட்டை இலையா? குக்கரா? அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை

Published On:

| By Mathi

Amit Shah TTV Dhinakaran

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மார்ச் 21-ந் தேதி டெல்லியில் சந்தித்து பேசினார்.

அதிமுக- பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் மிகப் பெரிய இழுபறி நீடித்து வருகிறது. அமமுக வேட்பாளர்கள் அனைவருமே இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனை.

ADVERTISEMENT

ஆனால் தங்களது குக்கர் சின்னத்தில்தான் அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பது டிடிவி தினகரனின் திட்டவட்டமான நிலைப்பாடு.

இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அமமுகவின் நிலையை டிடிவி தினகரன் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share