தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த 28ஆம் தேதி 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக மேலும் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் அருண் ராஜ், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
காஞ்சிபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வரும் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.