அதிமுக – பாஜக கூட்டணியில் பாரிவேந்தரின் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

Published On:

| By Pandeeswari Gurusamy

IJK

அதிமுக – பாஜக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 25) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐஜேகே) 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், “அதிமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி மற்றும் சின்னம் குறித்து இதுவரை முடிவாகவில்லை. இதுகுறித்து இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share