தவெக சார்பில் திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். போராட்டத்திற்கு இடையே நீதி வேண்டும் நீதி வேண்டும் என ஆவேச முழக்கங்கள் முன் வைக்கப்பட்டன. tvk vijay prostest for ajithkumar lockup death
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள கோயிலில் தற்காலிக காவலராக வேலை செய்து வந்த இளைஞர் அஜித்குமார் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். காவல்துறையினர் விசாரணையின் போது தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்குமார் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் நடந்த லாக்கப் மரணங்களுக்காக நீதி கோரி சென்னையில் இன்று (ஜூலை 13)ல் தவெக சார்பில் நடிகர் விஜய் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது,
“நீதி வேண்டும் நீதிவேண்டும். அஜித் குமாருக்கு நீதி வேண்டும்.
நீதி வேண்டும்.. நீதி வேண்டும். அனைவருக்கும் நீதி வேண்டும்.
வேண்டாம்.. வேண்டாம்.. வெற்று விளம்பரம் வேண்டாம்.
வேண்டும்.. வேண்டும்.. வெள்ளை அறிக்கை வேண்டும்
போதாது.. போதாது.. பொய் மன்னிப்பு போதாது.
உயிரின் மதிப்பு தெரியுமா.. மன்னராட்சிக்குப் புரியுமா” என்ற ஆவேச முழக்கங்கள் முன் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட விஜய், ”உங்ககிட்ட எந்த கேள்விக்கும் பதில் கிடையாது. எதற்கெடுத்தாலும் Sorry மா, நடந்திருக்கக் கூடாதுதான் என்பதுதான் பதில். இங்கே வெற்று மாடல் அரசு, Sorry மா மாடல் சர்க்காராக மாறிவிட்டது” என தமிழக அரசை கடுமையாக சாடினார்.