வைஃபை ஆன் செய்ததும் ‘ஆடுங்கடா என்னை சுத்தி’ பாடலுக்கு தாளம் போட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Vijay asks Stalin for an appointment
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாக சுழலுவதைப் போல தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யும், ‘அடுத்து என்ன? அடுத்து என்ன? என இடைவிடாமல் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் 95% பணிகள் முடிந்துவிட்டன. இதனால் அரசியல் ஆலோசனைகளை வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, அருண்ராஜ் உள்ளிட்டோருடனான விஜய்யின் இந்த ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இவர்களை தனித்தனியே அழைத்தும் விஜய் ஆலோசனை நடத்துகிறார். சில நேரங்களில் அனைவருடனும் ஒன்று சேர்ந்தும் விஜய் ஆலோசனைகளை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில், “சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் 10 மாதம்தான் இருக்கிறது. அதனால நாம ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துகிற மாதிரி செய்யனும். தமிழ்நாடு அரசுக்கு எதிராக நாம பெரிதாக எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. அதனால வலிமையாக ஒன்றை செய்யனும்” என்பது பொதுவான கருத்தாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. Vijay asks Stalin for an appointment
இதனையடுத்து விஜய்யும், ‘சரி.. அப்படின்னா என்ன செய்யலாம் சொல்லுங்க?’ என கேட்க, இப்போது திட்டம் ரெடியாகிவிட்டதாம். Vijay asks Stalin for an appointment
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று “பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும்” என்பது.
இந்த மாநாட்டைத் தொடர்ந்து ஜனவரி 20-ந் தேதி பரந்தூர் போராட்ட களத்துக்கு நேரடியாக சென்றார் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பின்னர் விஜய் பொதுவெளியில் மக்களுடன் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியும் பரந்தூர் போராட்ட களத்துக்கு சென்றதுதான். Vijay asks Stalin for an appointment
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் 910-வது நாளில் விஜய் கலந்து கொண்டார். அங்கு பேசிய விஜய், ”910 நாட்களுக்கு மேல் மண்ணுக்காக நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் போராட்டம் பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டேன்.

அந்த குழந்தையின் பேச்சு என்னை ஏதோ செய்தது. அதனால் உடனடியாக உங்களை பார்க்க வந்துவிட்டேன். உங்களுடன் தொடர்ந்து நிற்பேன் என சொல்வதற்காக வந்தேன்” என்றும் “என்னுடைய கள அரசியல் பயணம், உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்துதான் தொடங்குகிறது” எனக் குறிப்பிட்டும் ஆவேசமாக பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு அப்போது பேசுபொருளாக இருந்தது. Vijay asks Stalin for an appointment
இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூன் 13-ந் தேதி மீண்டும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினரை விஜய் சந்தித்து பேசினார். அப்போதும், “பரந்தூர் மக்களுக்கு நான் தொடர்ந்து துணை நிற்பேன்” என அவர்களிடம் உறுதி அளித்திருந்தார் விஜய்.
இதன் அடுத்த கட்டமாக தற்போது, விஜய் தரப்பில் இருந்து பரந்தூர் போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, ” நம்ம போராட்டத்தின் அடுத்த கட்டமாக 1,000 பேரை தயாராக இருக்குமாறு சொல்லி வையுங்க.. அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலினை விஜய் நேராக போய் சந்தித்து மனு கொடுக்கலாம் என முடிவு செஞ்சிருக்காரு. அதனால நீங்க எல்லாம் கோட்டைக்கு போவதற்கு தயாராக இருங்க” என சொல்லப்பட்டுள்ளது. இது பரந்தூர் போராட்டக் குழுவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் விஜய் தரப்பும், முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்கான அப்பாயின்ட்மென்ட் பெறும் வழிமுறைகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பிடம் கேட்டு வருகிறது. முதல்வர் சந்திக்க நேரம் ஒதுக்கியவுடன் 1,000-க்கும் மேற்பட்ட பரந்தூர் போராட்டக் குழுவினரை அழைத்துக் கொண்டு கோட்டைக்குப் போகப் போகிறாராம் விஜய்.

தமிழ்நாடு அரசு அதிகாரிகளைப் பொறுத்தவரையில், அண்டை மாநிலங்களின் விமான நிலையங்கள் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றன. நம்ம சென்னை விமான நிலையமும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகனும்.. இதற்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்கிற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.
ஆனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இந்த தேர்தல் நேரத்தில், மக்கள் இவ்வளவு கடுமையாக எதிர்க்கும் போது, இப்போதைக்கு இந்த திட்டம் தேவைதானா? என முதல்வர் ஸ்டாலினிடம் தமது கருத்தை ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலினை, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சந்தித்து அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார் விஜய். தம்மை விஜய் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்? என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.