தமிழ்நாட்டின் பேராளுமை தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுபவர்கள் சட்டமன்றத்தில் அல்ல, பட்டிமன்றத்தில் கூட வெல்ல முடியாது” என தவெக துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 26) செய்தியாளர்களை சந்தித்தார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அப்போது தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “விஜய் மாற்றம் என்பது குறித்து சொல்லவே இல்லை.. அவர் திமுகவிலிருந்து இரண்டு இட்லியையும், அதிமுகவில் இருந்து இரண்டு தோசையையும் எடுத்து ஒன்றாக பிச்சு போட்டு ஒரு உப்புமா கிண்டி விட்டார். ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்ஜிஆரையும் வைத்து கொண்டார். இதில் என்ன மாற்றம் வருகிறது. இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டையை தைத்து விட்டார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பி விட்டார்” என விமர்சித்தார்.
விஜய்யை விமர்சிப்பதாக கூறி தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் இருவரையும் கீழ்த்தரமாக சீமான் சாடியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் முன்னிறுத்தி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியல் செய்து வரும் நிலையில், சீமானுக்கு இப்போதாவது பதிலடி கொடுப்பார என தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சீமானின் பெயரைக் குறிப்பிடாமல் துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தற்போது கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போலி போராளிகள் கரைந்து போவார்கள்!
அதில் “தமிழ் நிலத்தில் அரசியல் என்பது அனைவருக்குமானது, ஆட்சி-அதிகாரம் என்பது எளியவர்களுக்கானது என்ற அகராதியை வகுத்துக் கொடுத்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. தமிழ் மக்களின் தனித்தன்மையான வரலாற்றுச் சிறப்புக்கும், தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமைக்கும் அடித்தளம் அமைத்தது அவர் ஆட்சி.
அவர் வழியில், பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் தொடங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நியாயவிலைக் கடைகள், கிராம நிர்வாக அலுவலர் நியமனங்கள் போன்ற மக்களுக்கான மகத்துவத் திட்டங்கள் வரை வகுத்து பொற்கால ஆட்சியை நடத்தினார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
தமிழ் இலக்கியத்தின் அறத்தையும், தமிழ் மொழியின் உலகளாவிய குணத்தையும் பேரறிஞர் அண்ணா பறைசாற்றினார் என்றால், தாய்த்தமிழ் உறவுகள் மட்டுமின்றி தொப்புள்கொடி ஈழத் தமிழ் உறவுகளையும் அரவணைத்தார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
தமிழ்நாட்டின் இத்தகைய பேராளுமை தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுபவர்கள் சட்டமன்றத்தில் அல்ல, பட்டிமன்றத்தில் கூட வெல்ல முடியாது. தொடர்ச்சியாகத் தரம் தாழ்ந்து பேசும் போலி போராளிகள் காலத்தில் கரைந்து போவார்கள்.
பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோரை அவமதிக்க யாருக்கும் அருகதை இல்லை. அவர்கள் அளவிற்கு இறங்கிப் பேச நமக்கு அவசியமும் இல்லை” என ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.’
முன்னதாக அதிமுக தரப்பில் அக்கட்சியின் மாநில ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “பேரறிஞர் அண்ணாவை பற்றியோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பற்றியோ இழிவாகப் பேச சீமானுக்கு என்ன தகுதி உள்ளது? மறைந்த தலைவர்களை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீமானுக்கு இல்லை.
பாலியல் குற்ற வழக்கில் மாட்டி மூளை பிசகி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு போய் சரணடைந்ததால், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை எல்லாம் வாய்க்கொழுப்பில் விமர்சித்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது!” என கண்டித்திருந்தார்.
இந்த நிலையில்