மாமல்லபுரத்தில் இன்று (மார்ச் 7) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவர் விஜய், மகளிர் தின வாழ்த்து கூறி 2026 தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டார்.
எனது நேரடி கட்டுப்பாட்டில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்புக்காக தனி இலாகா ஏற்படுத்தப்படும் என முதல் வாக்குறுதியை அளித்தார்.
மேலும் அவர், “ தமிழகத்தில் உள்ள 60 வயது வரையிலான அனைத்து பெண்களுக்கும் மாதம் மாதம் ரூ.2,500 வழங்கப்படும். இதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஊழியர்கள் குடும்பங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
அண்ணப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
அண்ணன் சீர் திட்டம் மூலம் தங்கைகளின் திருமணத்தின் போது 8 கிராம் தங்கம், தரமான பட்டு சேலை தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்.
காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின் மூலம் இடைநிற்றலே இல்லை என்ற நிலையை உருவாக்க ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் 15ஆயிரம் ரூபாய் பொருளாதார உதவியாக வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.
