மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஏற்பாடுகளை நேற்று இரவு தவெக தலைவர் நடிகர் விஜய் பார்வையிட்டார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக விடிய விடிய தமிழ்நாடு முழுவதும் இருந்தும் தவெக தொண்டர்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தனர்.
தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2-வது அரசியல் மாநாடு இன்று நடைபெறுகிறது.
மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மொத்தம் 506 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.
- மாநாட்டு மேடையின் முகப்பில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் விஜய் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
- மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் சேர்கள் போடப்பட்டுள்ளன
- மேடையில் இருந்து 300 மீட்டர் தொலைவு ரேம்ப் வாக் நடந்து தொண்டர்களை விஜய் சந்திக்க நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
- விஜய் ரேம்ப் வாக் வரும் போது பவுன்சர்கள் மற்றும் போலீசார் என 2 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- 200-க்கும் மேற்பட்ட உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன
- கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நெரிசல் ஏற்படாத வகையில் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- மாநாட்டில் குடிநீர் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜய் நேற்று இரவு 7 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.
- மாநாட்டு ஏற்பாடுகளை நடிகர் விஜய் நேற்று இரவு பார்வையிட்டார்.
- மாநாட்டில் நேற்று சரிந்து விழுந்த 100 அடி உயர கம்பம் தொடர்பாக விஜய் விசாரித்தார்.
- மாநாடு 2,500 பேர் கொண்ட சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன.
- மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன
- விஜய், அவரது பெற்றோர் உள்ளிட்டோருக்கு 5 கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன
- வாட்டர் பாட்டில், பிஸ்கட், குளுக்கோஸ் அடங்கிய ஸ்நாக்ஸ் பாக்ஸ் வழங்கப்படும்
- மாநாடு நடைபெறும் இடங்களில் 14 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
- மாநாட்டில் பங்கேற்க விடிய விடிய தொண்டர்கள் குவிந்து வந்தனர்.
- -மாநாட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
