டிஜிட்டல் திண்ணை: வேட்பாளர்களுக்கு ‘தட்டுப்பாடு’? சடுகுடு ஆடும் புஸ்ஸி.. எச்சரித்த விஜய்

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “மழைன்னு பேஞ்சா சேதாரம்னு இருக்கத்தான் செய்யுமே”என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்..

என்னய்யா.. தேர்தல் நேரத்துல சேதாரத்தை பத்தி பேச்சு?

ADVERTISEMENT

நான் சொல்றது.. ஒவ்வொரு கட்சியிலேயும் வேட்பாளர் பிரச்சனை வெடிக்குது இல்லையா? அதை பத்திதான்..

விஜய்யோட தவெகவுல வேட்பாளர்களை முடிவு செய்யுறது ஒன்லி ஒன் புஸ்ஸி ஆனந்த் மட்டும்தான்னு சொல்றாங்க..

ADVERTISEMENT

இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “எங்க கட்சியில வேட்பாளராக நின்னு போட்டி போடனும்னு பலருக்கும் ஆசைதான்.. ஆனா பல தொகுதிகளில செலவு செய்யக் கூடிய பலமான, ‘நல்ல வேட்பாளர்கள்’ அப்படிங்கிற கேட்டகிரிக்குதான் ரொம்பவே தட்டுப்பாடாகிடுச்சு.. புஸ்ஸி ஆனந்த் ஒருத்தர்தான் ஓவர் ஆல் எல்லா தொகுதி வேட்பாளர்களையும் முடிவு செய்யுறாரு.. ஆதவ் அர்ஜூனா தொடங்கி யாரையுமே அந்த ஏரியாவுக்குள் வரவிடாமலும் பார்த்துகிட்டு இருக்கார் புஸ்ஸி” என்கின்றனர்..

சரி… தவெக வேட்பாளர் பட்டியல் எப்ப ரிலீஸாம்?

ADVERTISEMENT

இதை பத்தி கேட்டப்ப, ”நாளைக்கு மார்ச் 25-ந் தேதி தவெக நிர்வாகிகளை வரவழைச்சு விஜய் ஒரே இடத்துல ஆலோசனை நடத்துறார்.. அதோட மார்ச் 27-ந் தேதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுட்டு மறுநாள் 28-ந் தேதியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் ஜரூரா பிரசாரத்துக்கு கிளம்ப இருக்கிறார் விஜய்..

புதுச்சேரியில்ல முதல் நாள் நைட் தனித்து போட்டின்னு அறிவிச்சுட்டு மறுநாள் ஏதோ ஒரு சிறிய கட்சிக்கு 2 சீட் கொடுத்து ‘கூட்டணி’ன்னு அறிவிச்ச மாதிரி எந்த குழப்பமும் வேட்பாளர் பட்டியல்ல வந்துடக் கூடாதுன்னு விஜய் ஸ்டிரிக்ட்டாவே எச்சரித்து இருக்கிறதால புஸ்ஸி அண்ட் கோ ரொம்ப பதற்றமாவே இருக்கு”ன்னு சொல்றாங்க என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share