தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் குறித்து அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், வெற்றி வாகை சூடப்போகும் வேட்பாளர்களை விஜய் மட்டுமே அறிவிப்பார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி விஜய்யால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் விஜய். அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தவெக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு அறிமுகக் கூட்டம் நடைபெறப் போகிறது; திருச்செங்கோட்டில் தவெக பொதுச்செயலாளர்களில் ஒருவரான அருண்ராஜ் போட்டியிடுவார் என ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பகிரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
