ADVERTISEMENT

விஜய்யின் பேச்சை கேட்காத தொண்டர்கள்!

Published On:

| By Selvam

tvk cadres not obey vijay

தனது வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் இன்று (மே 1) தொண்டர்களை அறிவுறுத்திய நிலையில், விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர்ந்தனர். tvk cadres not obey vijay

ஏப்ரல் 26, 27 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டிக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜய் கோவை சென்றிருந்தபோது, அவரது வேனை பின்தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாகனங்களில் பின் தொடர்ந்தனர். கோவையில் கண்ட கூட்டத்தை பார்த்து விஜய் அதிர்ச்சியடைந்தார்.

ADVERTISEMENT
 tvk cadres not obey vijay

இந்தநிலையில், நேற்று விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “தவெக தொண்டர்கள் நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில், ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக விஜய் இன்று சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்ல திட்டமிட்டிருந்தார். விஜய் மதுரை வருவதை அறிந்த தொண்டர்கள், காலை 6 மணி முதல் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில், சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய், கட்சி தொண்டர்கள் என்னுடைய வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்று மீண்டும் அறிவுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் சென்ற விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். விஜய் கேரவனில் ஏறி தொண்டர்களை நோக்கி கையசைத்தார். அப்போது விஜய்யை நோக்கி தவெக துண்டு, பூ மாலையை தொண்டர்கள் வீசினர்.

ADVERTISEMENT
 tvk cadres not obey vijay

மேலும், விஜய் வாகனத்தின் முன்பாக செல்ஃபி எடுத்தபடி இருசக்கர வாகங்களில் சிலர் சென்றனர். இன்னும் சிலர் விஜய் கேரவன் வாகனத்தை பின் தொடர்ந்து ஓடினர். தவெக தொண்டர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கேரவன் மீது ரசிகர்கள் சிலர் ஏற முற்பட்டதால், கேரவனின் முன்பகுதி சேதமடைந்தது. தொடர்ந்து விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்த தொண்டர்களை மதுரை பெருங்குடி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் யாரும் பின் தொடர வேண்டாம் என்று விஜய் அறிவுறுத்திய நிலையில், அவரது பேச்சை கேட்காமல் தொண்டர்கள் பின் தொடருவது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது. tvk cadres not obey vijay

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share