ADVERTISEMENT

வேலுடன் இறங்கிய விஜய் : ஆரவாரம் செய்த தவெகவினர்!

Published On:

| By Kavi

நாகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தவெக தொண்டர்கள் ஆளுயர வேலை பரிசாக வழங்கினர். 

2026 சட்டமன்ற தேர்தலை தமிழக வெற்றி கழகம் எதிர்கொள்கிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் தனது இரண்டாவது பிரச்சாரத்தை இன்று (செப்டம்பர் 20) நாகையில் நடத்தினார் விஜய். 

அப்போது நாகை மக்களுக்கும், மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவாக பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலினையும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்தார். 

ADVERTISEMENT

அரை மணி நேரம் பேசி தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். 

கையில் வேலுடன் தவெக தலைவர் விஜய்

பிரச்சாரம் முடிந்து பேருந்தின் மேலே இருந்து கீழே இறங்கும் சமயத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் ஆள் உயர வேல் ஒன்றை பரிசாக வழங்கினர். 

ADVERTISEMENT

அதைப் பெற்றுக் கொண்ட விஜய் தொண்டர்களை பார்த்து கை அசைத்து விட்டு கீழே இறங்கினார். அப்போது தொண்டர்கள் தவெக, தவெக என ஆரவாரம் செய்தனர்.

ஏற்கனவே திருச்சி பிரச்சாரத்தின் போதும் விஜய்க்கு தொண்டர் ஒருவர் வேல் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share