அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனை ஏற்க மறுத்து வரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருக்கிறார். டிடிவி தினகரனை இன்று முற்பகல் சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே பாஜக- அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக இன்று சென்னைக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்களின் படி பியூஷ் கோயலின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
